ஜெ.ஜெயலலிதா என்னும் நான்..! மறைந்தும் மறக்காத சரித்திர நாயகியின் நினைவு தினம்..!

ஜெ.ஜெயலலிதா என்னும் நான்..! மறைந்தும் மறக்காத சரித்திர நாயகியின் நினைவு தினம்..!

தமிழ்நாட்டின் இருப்புப் பெண்மணி, தமிழ் மக்களால் அன்போடு அம்மா என்றழைக்கப்பட்ட முன்னா முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று.

தொடக்கம்:

தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக 1965 களில் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கி 1980 வரை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையான ஜெயலலிதா தமிழ்நாட்டின் முதலமைச்சராக அதிவும் சரித்திரத்தில் அழிக்க முடியாத ஒரு இடத்தை பிடிப்பார் என்று யாருமே அப்போது நினைத்திருக்க மாட்டார்கள்.

ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று நூல் பேசும் அறியப்படாத பக்கங்கள் | Read Book  Reviews | Buy Tamil & English Books Online | CommonFolks

அரசியல் பிரவேசம்:

முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரை குருவாக ஏற்று சினிமாவில் நடிக்கத் தொடங்கிய ஜெயலலிதா, ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் தொடங்கி பட்டிக்காட்டு பொன்னையா வரை  28 திரைப்படங்களில் ஜோடியாக நடத்துள்ளார். சினிமாவில் மட்டும் அல்ல அரசியலிலும் எம்.ஜி.ஆர் யே குருவாக ஏற்று அரசியலும் கால் பதித்தார்.

அவமானமும், வெற்றியும்:

அவர் அரசியலில் நுழைந்த போது அவர் பெற்ற வரவேற்புகளை விட, அவர் சந்தித்த அவமானங்களே அதிகமாக இருந்தது. குறிப்பாக எம்.ஜி.ஆரின் மறைவிற்கு பின்னர் பெரிதும் அவமானப்படுத்தப்பட்டார். இனி ஜெயலலிதாவிற்கு அரசியலில் இடமே இல்லை என பலர் முடிவு செய்த போது, யாரும் எதிர்பார்க்காத வகையில் அரசியலில் பிரவேசித்தார். எம்.ஜி.ஆர் இறப்பின் போது சீனியர்களால் கீழே தள்ளவிடப்பட்டவர், காலப்போக்கில் அந்த சீனியர்களை தனக்கு கீழே அமரவைத்தது வரலாறு.

அதிமுக இரண்டாக உடைந்த போது, கட்சியை தன் வசமாக்கியவர், எந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளால் தான் அவமானப்பட்டோமோ, அந்த சட்டமன்றத்திற்குள் முதலமைச்சராகத் தான் நுழைவேன் என வைராக்கியத்தோடு இருந்தார். 1991ஆம் ஆண்டு ராஜிவ் காந்தி உயிரிழக்க, திமுக ஆட்சி கலைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சரானார் ஜெ.ஜெயலலிதா. முதலமைச்சராக சட்டமன்றத்திற்குள் அடி எடுத்து வைத்து எதிர்க்கட்சிகளிடம் செய்த சவாலிலும் வெற்றிகொண்டார்.

இதையும் படிக்க: 750 ஜோடி காலணிகள்.. 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலைகள்..! ஜெயலலிதாவின் பொருட்களை ஏலம் விடக்கோரிய வழக்கு விசாரணை..!

5 முறை முதலமைச்சர்:

முதல்முறையாக 1991-1996ஆம் ஆண்டு தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஜெயலலிதா அந்த 5 ஆண்டுகளில் எண்ணற்ற விமர்சனங்களை சந்தித்தார். குறிப்பாக, அவர் சிறை செல்ல காரணமாக இருந்த சொத்துக்குவிப்பு வழக்கு, சிறுதாவூர் பங்களா, கொடநாடு பங்களா என பல சர்ச்சைகள் அந்த 5 ஆண்டு கால ஆட்சியை வைத்தே பேசப்பட்டது.

2001 இல் சில மாதங்களும் பின் மீண்டும் 2002 - 2006 வரை தமிழ்நாட்டை மூன்றாம் முறை ஆட்சி செய்தவர், 2011 மற்றும் 2016 ஆகிய இரு முறை மீண்டும் ஆட்சிக்கு வந்தார். 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவர், தமிழ்நாடு மக்களுக்கு செய்த நலத்திட்ட்ங்கள் ஏராளம்.

நலத்திட்டங்கள்:

முக்கியமாக பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்காகவும் பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண உதவித் திட்டம், மகப்பேறு உதவித்திட்டம், பாலூட்டும் மகளிருக்கு பொது இடங்களில் தனி அறை, பெண்களுக்கான கல்பனா சாவ்லா விருது வழங்கும் திட்டம் மற்றம் அனைத்து மகளிர் காவல் திட்டம் இப்படி சிலவற்றை உதாரணமாகச் சொல்லலாம்.

தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, நகர்ப்புற சுகாதாரம், வெளிநாட்டு முதலீடு, கலை கலாச்சார பாதுகாப்பு இப்படி பல்துறைகளிலும் தமிழ்நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்ற பெருமையும் ஜெயலலிதாவிற்கு உண்டு. மிகச் சிறந்த படிப்பாளி மற்றும் மொழி அறிவு பெற்றவர், மிகச் சிறந்த நிர்வாகியாக திகழ்ந்த அவருக்காக தமிழ்நாடு மக்கள் எதையும் செய்ய தயாராக இருந்தனர். 

இரும்பு பெண்மணி:

நீங்கள் செய்வீர்களா என ஜெயல்லிதா கேட்ட ஒவ்வொன்றையும் அவருக்காக நிறைவேற்றினார்கள் அதிமுகவின் இரத்தத்தின் இரத்தங்கள். எத்தனை தடை கற்கள் இருந்தாலும் அவை அனைத்தையும் படிக்கற்களாக மாற்றி மேலேறிய ஜெயலலிதா யாரும் தொட முடியாத உயரத்தை அடைந்தார். தமிழ்நாட்டின் இரும்புபெண்மணி என அன்போடு அழைக்கபட்டார்.

2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கபட்டபோது எழுந்து வாருங்கள் அம்மா என தமிழ்நாடு மக்கள் அழைத்தது இப்போதும் அப்பல்லோ வாயிலில் கேட்டுக்கொண்டுள்ளது. 

நினைவு தினம்:

வாழ்க்கையில் பல சர்ச்சைகளையும், பல சாதனைகளையும், பல உயரங்களையும் தொட்ட அவரின் இறுதி கட்ட நாட்கள இன்னும் மர்மமாகவே உள்ளது. அவரது மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அவர் டிசம்பர் 4 ஆம் தேதியே இறந்ததாக குறிப்பிட்டுள்ளது. அது குறித்து தமிழ்நாடு அரசு விசாரித்து வரும் நிலையில், டிசம்பர் 5 ஆம் தேதியை அவரது நினைவு நாளாக அனுசரித்து வருகின்றனர் அதிமுக ஆதரவாளர்கள்.

சிறு வயதில் இருந்தே ஜெயலலிதாவிடம் ஒரு குணம் இருந்துள்ளது. அதாவது தன்னை ஒருவர் விமர்சித்தால் அவரிடம் சண்டை போடாமல், தன்னை அவர் எதற்காக விமர்சித்தாரோ அதிலே முதல் ஆளாக வந்து, விமர்சித்தவரையே புகழ வைப்பாராம். பல சர்ச்சைகளில் சிக்கினாலும், தன்னை இகழ்ந்தவர்களின் வாயாலேயே தன்னை பற்றி புகழச் செய்த்துவிட்டே சென்றுள்ளார் ஜெ.ஜெயலலிதா என்னும் சரித்திரம்.