13 வருடங்கள்... 10 அவதாரங்கள் ... கமலை உலகநாயகனாக்கிய தசாவதாரம்!!

13 வருடங்கள்... 10 அவதாரங்கள் ... கமலை உலகநாயகனாக்கிய தசாவதாரம்!!

தமிழ் சினிமா பல்வேறு கட்டங்களில் பல பரிமாணங்களையும், முன்னேற்றத்தையும் கண்டுள்ளது. அந்த சினிமாவில் புதுவிதமான முயற்சிகளால் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் கமல்ஹாசன் 

‘கலைக் கடவுள்’ என்றும் ‘ஆழ்வார்பேட்டை ஆண்டவர்’ என்றும் தன் ரசிகர்களால் பிரியத்துடன் அழைக்கப்படும்  கமல்ஹாசன் அப்போதைய காதல் இளவரசன்

அதுமட்டுமல்ல கமல் 2 வேடங்கள், 3 வேடங்கள், 4  வேடங்கள் என திரையுலகையே திரும்பி பார்க்க வைத்தவர்.

அபூர்வ சகோதரர்கள், மைக்கேலாக, மதனாக, காமேஸ்வரனாக, சுப்ரமணிய ராஜூவாக அசத்தி, ஹாய்ஸப்படுத்தியர். 


அடுத்தாவது ஒரே படத்தில் பத்துவேடங்களில் நடித்து திரையுலகையே பிரமிக்க வைத்தவர் கமல்ஹாசன்.

‘அவ்வை சண்முகி’, ‘தெனாலி’, ’பஞ்சதந்திரம்’ என்று கமல் - கே.எஸ்.ரவிக்குமார் கூட்டணி எல்லாமே ஹிட்டடித்தன. இந்த வரிசையில், மிகப்பிரமாண்டமான மிரட்டலாக பத்து வேடங்களில் கமல் நடித்த  படம் தான்’தசாவதாரம்’, 

12ம் நூற்றாண்டு சோழ ராஜ்ஜியத்தின் கதையையும் இன்றைய நிகழ்கால விஷயத்தையும் சேர்த்து, கேயாஸ் தியரி என்கிற அறிவியலையும் கலக்கி, வைரஸ் பரவலை ஆங்கிலப் படத்துக்கு இணையானத் தந்ததுதான் இந்திய திரையுலகின் புதிய முயற்சியாக தசாவதாரம்.

’கல்லை மட்டும் கண்டால்’, ‘முகுந்தா முகுந்தா’, ‘ஓ ஓ சனம்..’, ‘உலக நாயகனே...’ என எல்லாப் பாடல்களுமே மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகின. 

‘கடவுள் இல்லைன்னு எங்கேங்க சொன்னேன்... இருந்தா நல்லாருக்கும்னுதான் சொன்னேன்’ எனும் வசனம் இன்று வரை செம ஹிட் என்று தான் கூறவேண்டும் 

‘நாயகன்’ தொடங்கி கமல் இப்படி எத்தனையோ அவதாரங்கள் எடுத்திருந்தாலும் ‘தசாவதாரம்’ கமலின் திரையுலகில் ஒரு விஸ்வரூபம் வெற்றி.

கே.எஸ்.ரவிகுமார் கமலுக்கு அளித்த அடைமொழியான ‘உலக நாயகன்’ இந்தப் படத்தில் இருந்துதான் தொடங்கியது. இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களும் கமலின் ரசிகர்களும் ‘உலகநாயகன்’ எனும் அடைமொழியை ஏற்றுக்கொள்ளும் வகையிலான அடைமொழியாகிப் போனது. 

2008ம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி வெளியானது ‘தசாவதாரம்’ என்று திரையுலகில் மிக பெரிய அளவில் பேசப்படுகிறது, பாராட்டப்படுகிறது என்பது நிதர்சன உண்மை.