தமிழ்நாட்டில் பால் விலையை உயர்த்தும் நடவடிக்கை இப்போதைக்கு இல்லை" - அமைச்சர் மனோ தங்கராஜ்

நாளை மாலை முதல் சென்னையில் மீண்டும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து, கூடுதலாக தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மழை பாதிப்பு உள்ள பகுதியில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கோள்ள ஏற்கனவே 30 NDRF வீரர்கள் உள்ள நிலையில், கூடுதலாக 90 வீரர்கள் கடலூர்,திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து விரைந்து கொண்டு உள்ளனர்
நாளை மாலை முதல் சென்னையில் மீண்டும் மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | ”ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்திற்கு எதிரானது” - உச்ச நீதிமன்றம் காட்டம்!
மத்திய மேற்கு வங்க கடலில் மையம் கொண்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரமாக ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசாவின் பரதீப்பில் இருந்து தெற்கில் சுமார் 430 கி.மீ. தொலைவிலும், (மேற்கு வங்கம்) திகாவில் இருந்து தெற்கு-தென்மேற்கில் 590 தொலைவிலும் மற்றும் (வங்காளதேசம்) கேபுபாராவில் இருந்து தென்-தென்மேற்கில் 740 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 18 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது.
பின்பு சற்று வலுகுறைந்து அக்டோபர் 25-ம் தேதி மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வங்கதேசத்தின் கேபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
புயலாக உருவாக்கும் பட்சத்தில் வட இந்திய பெருங்கடலில் புயலுக்கு பெயரிடும் முறைப்படி ஈரான் நாடு பரிந்துரைத்த Hamoon என பெயர் வைக்கப்பட உள்ளது.
இதையும் படிக்க | பாஜகவில் இருந்து நடிகை கவுதமி திடீர் விலகல்... மன உளைச்சலுக்கு உள்ளாக்கினாரா மூத்த தலைவர்?
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வடகிழக்கு மழை துவங்கியுள்ளதாகவும், இதன் காரணமாக நெல்லை கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வடகிழக்கு மழை துவங்கியுள்ளதாகவும், அடுத்த மூன்று நாட்களுக்கு தமிழ்நாடு, கேரளாவில் பரவலாக மழைபெய்யும் என்றும் தெரிவித்தார். நெல்லை, கன்னியாகுமரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.
தென்மேற்கு அரபிக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தேஜ் புயலாக வலுப்பெற்றுள்ளதாக தெரிவித்தார். இது அடுத்த 12 மணி நேரத்தில் தீவிரப் புயலாகவும், அதனைத் தொடர்ந்து 24 மணி நேரத்தில் மிக தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார். இது வடமேற்கு மற்றும் வடகிழக்கு திசையிலும் நகர்ந்து வங்க தேச கடற்கரையை நோக்கி நகர்ந்து செல்லக்கூடும் என பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
அரபிக் கடலில் உருவான தேஜ் புயல், தீவிர புயலாக வலுப்பெற்றதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும், ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்பவும் பாலச்சந்திரன் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
பல்லடம் அருகே கொத்து கொத்தாய் மயில்கள் செத்துக்கிடக்கும் நிலையில் இவற்றிற்கு விஷம் வைத்து கொன்றது யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம், காமநாயக்கன்பாளயத்தை அடுத்த கோவை திருப்பூர் எல்லையில் உள்ள காந்திநகர் பகுதியில் சண்முகராஜ், ராமசாமி மற்றும் கோபால்சாமி ஆகியோருக்கு சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தில் கொத்து கொத்தாக 22 மயிகள் செத்துகிடந்தன. இதனை கண்ட ஆடு மேய்க்கும் பெண்மனி தோட்டத்து உரிமையாளரிடம் சென்று தகவல் அளித்துள்ளார்.
தகவலை அடுத்து விரைந்து வந்த தோட்டத்து உரிமையாளர்கள் மயில்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கிராம நிர்வாகத்திற்கும் சுல்தான்பேட்டை காவல் நிலையத்திற்கும் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கொத்துக்கொத்தாக மயில்கள் செத்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விதைகளில் யாரேனும் விசம் வைத்திருக்கலாம் எனவும் அதனை தின்ற மயில்கள் செத்திருக்கிலாம் என தெரிகிறது. மேலும் மயில்களின் வாயில் இருந்து நுரை தள்ளியிருப்பது அதனை உறுதி நெய்யும் விதமாக உள்ளது. இதனிடையே மயில்கள் நேற்று மாலையே இறந்து கிடந்ததாகவும் அதனை மறைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும் காலை அவ்வழியாக சென்ற பள்ளி மாணவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து சமூக ஆர்வலர்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதன் பிறகுதான் 22 மயில்கள் இறந்து கிடந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வனப்பறவையானமயில் இறந்தால் உடனடியாக வனத்துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது விதி. இதனிடையே விஷம் வைத்து கொல்லப்பட்ட மயில்கள் வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டு உடற்கூறாய்விற்கு அனுப்பப்பட்டுள்ளது. முழுமையான விசாரணைக்குப் பிறகுதான் உண்மை தெரிய வரும் என வனத்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பங்காரு அடிகளார் மறைவு; அண்ணாமலை பாதயாத்திரை ரத்து!
முதுமலையில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கு உடல் எடை பரிசோதனை துவக்கம். ஒன்றன்பின் ஒன்றாக ஒய்யாரமாக வந்து எடை போட்டு சென்ற வளர்ப்பு யானைகள். கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் யானைகள் ஆரோக்கியமாக இருப்பதாக வனத்துறையினர் தகவல்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் தெப்பக்காடு மற்றும் அபயாரணயம் என 2 யானைகள் முகாமில் 28 வளர்ப்பு யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
யானைகளின் தற்போதைய உடல் நலத்தை பரிசோதனை செய்யும் வகையில் தொரப்பள்ளியில் உள்ள எடை மேடையில் எடை போடும்பணி நேற்று தொடங்கி இன்றும் இரு முகாம்களில் இருந்து யானைகள் கொண்டுவரப்பட்டு எடை கணக்கிடப்பட்டு வருகிறது.
அவ்வாறு எடை போடும் யானைகளுக்கு எடை கூடும் பட்சத்தில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் மாற்றத்தை கண்டறிந்து அந்த யானைக்கு நடை பயிற்சி மற்றும் ஊட்டச்சத்து உணவுகளை குறைக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட உள்ளனர்.
மேலும் யானைகளுக்கு எடை குறையும் பட்சத்தில் அதற்கான ஊட்டச்சத்து உணவுகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு யானையை பராமரிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட உள்ளனர். இந்த எடை கணக்கீடு பணியில் கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் ஒவ்வொரு யானையும் உடல் ஆரோக்கியத்தோடு இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிக்க:10 புலிகள் இறந்த விவகாரம்; விசாரணைக் குழு அமைக்க ஆம் ஆத்மி கோரிக்கை!