வரலாறு காணாத வகையில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. ரூ.83-ஐ தாண்டி சென்றதால் நிபுணர்கள் அதிர்ச்சி..!

உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை போன்றவை காரணங்களாக பார்க்கப்படுகிறது..!

வரலாறு காணாத வகையில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு.. ரூ.83-ஐ தாண்டி சென்றதால் நிபுணர்கள் அதிர்ச்சி..!

காரணங்கள்:

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் சரிந்து கொண்டே செல்கிறது. வெளிநாட்டு சந்தையில் டாலரின் மதிப்பு, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், கச்சா எண்ணெய் விலை உள்ளிட்டவை இந்திய ரூபாயின் வீழ்ச்சிக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

நேற்று ரூ.83.02:

நேற்று முன்தினம் வர்த்தக முடிவில் 82.36 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு நேற்று காலை 82.30 ஆகக் குறைந்தது. நேற்று வர்த்தக முடிவில் ரூபாயின் மதிப்பு 83.02 ஆக மேலும் சரிந்து வரலாறு காணாத வகையில் முதன் முறையாக 83 ரூபாய்க்கு மேல் சென்றுள்ளது. 

இன்று ரூ.83.15:

இன்று காலை வர்த்தக்கம் தொடங்கிய போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து ரூ.83.15 ஆக குறைந்திருக்கிறது. கடந்த செப்டம்பர் 30-ம் தேதி ரூ.79.87 ஆக இருந்த ரூபாயின் மதிப்பு ஒரு மாதத்திற்குள் ரூ.3.28 வரை குறைந்திருக்கிறது.