மீண்டும் சரிவை சந்தித்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு.. ஒரு டாலரின் இந்திய மதிப்பு எவ்வளவு?

அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்து வருவது காரணம் எனக் கூறப்படுகிறது..!

மீண்டும் சரிவை சந்தித்துள்ள இந்திய ரூபாய் மதிப்பு.. ஒரு டாலரின் இந்திய மதிப்பு எவ்வளவு?

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் வரலாறு காணாத அளவுக்கு சரிவை கண்டுள்ளது. இந்தியாவில் அன்னிய செலாவணி இருப்பு, தொடர்ந்து ஏழாவது வாரமாக குறைந்துள்ளது. 

இது தவிர அமெரிக்காவின் பெடரல் வங்கி வட்டி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்தியா ரூபாயின் மதிப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் இன்று வர்த்தகம் தொடங்கியதும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 40 பைசா குறைந்து 81 ரூபாய் 93 காசுகளாக சரிந்துள்ளது.