பங்கு சந்தை இன்று ஒரே நாளில் 1,188 புள்ளிகள் வரை சரிவு.!!

மும்பை பங்கு சந்தை இன்று ஒரே நாளில் ஆயிரத்து 100 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.

பங்கு சந்தை இன்று ஒரே நாளில் 1,188 புள்ளிகள் வரை சரிவு.!!

மும்பை பங்கு சந்தை இன்று ஒரே நாளில் ஆயிரத்து 100 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது.

வர்த்தக நேரம் தொடக்க நிலையில் மும்பை பங்கு சந்தை 800 புள்ளிகள் வரை சரிவை சந்தித்த நிலையில் தற்போது மேலும் சரிந்து ஆயிரத்து 188 புள்ளிகள் சரிந்துள்ளது.

இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 347 புள்ளிகள் வரை சரிந்து 16, 930 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது. பங்கு சந்தை தொடர் சரிவால் பங்கு முதலீட்டாளர்கள்  கலக்கமடைந்துள்ளனர்.