வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50காசுகள் குறைவு..! சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.36.50காசுகள் குறைவு..! சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றமில்லை..!

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை  36 ரூபாய் 50 காசுகள் குறைந்துள்ளது. இது இன்றைய தினம் முதல் அமலுக்கு வருகிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைப்பது போல், 

ரூ.36.50 குறைவு: சிலிண்டர் விலையையும் எண்ணெய் நிறுவனங்கள் மாதத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை மாற்றி அமைத்து வருகின்றன. அதன்படி ஆகஸ்ட் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்று மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டருக்கு ரூ.36.50 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையில் மாற்றம் இல்லை: டெல்லியில்  வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்  ரூ.2,012 .50 காசுகளுக்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது விலை குறைவு மூலம் ரூ.1,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது.இதேபோல் கொல்கத்தாவில் 19 கிலோ சிலிண்டர் ரூ.2,095.50 காசுகளுக்கும், மும்பையில் ஏற்கனவே ரூ.972.50 காசுகளாக இருந்த சிலிண்டர் விலை ரூ.1,936.50 காசுகளாக குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் வணிக சிலிண்டர் ரூ.2,177.50 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ரூ.36.50 காசுகள் குறைக்கப்பட்டு இருப்பதால், ரூ.2,141ஆக விற்பனை செய்யப்படுகிறது. நடப்பு மாதத்தில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.