விண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்

விண்ணை தொடும் பெட்ரோல் விலை: பேசாமா வண்டிய வித்துறலாம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 96 ரூபாயை நெருங்கி வருவதால் வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதன்படி, தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

அந்த வகையில் பெட்ரோல், டீசல் விலை கடந்த சில மாதங்களாகவே உச்சத்தை எட்டி வந்தன. அவ்வபோது விலையில் சிறிது சரிவு ஏற்பட்டாலும், தற்போது அவற்றின் விலை ஏறுமுகமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில், சென்னையில் இன்றைய தினம் பெட்ரோல் ஒரு லிட்டர் 95 ரூபாய் 76-காசுக்கும், டீசல் விலை ஒரு லிட்டர் 89 ரூபாய் 90-காசுக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.