மும்பை பங்குச்சந்தை ; சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு.!

மும்பை பங்கு சந்தை 850 புள்ளிகளுக்கு மேல் சரிவை கண்டுள்ளது.

மும்பை பங்குச்சந்தை ; சென்செக்ஸ் புள்ளிகள் சரிவு.!

கொரோனா 2 ஆம் அலை தளர்வுகளுக்கு பிறகு எழுச்சியுடன் காணப்பட்ட மும்பை பங்கு சந்தை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் நிலையற்று காணப்படுகிறது.

இந்த நிலையில் மும்பை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே 858 புள்ளிகளுக்கு மேல் சரிவை சந்தித்துள்ளது. இதனால் மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 59,364 என நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது.

இதேபோல் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டியும் 245 புள்ளிகள் வரை சரிந்து 17,679 ஆக நிலைக் கொண்டு வர்த்தகமாகியுள்ளது.

கொரோனா அதிகரிப்பால் நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கொரோனா நெறிமுறைகள் கடுமையாக்கப்பட்டு வரும் நிலையில் இதன் எதிரொலியாக பங்கு சந்தையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.