தெருநாய்களுக்கு உணவளித்து வந்த பெண்ணிற்க்கு 8 லட்சம் அபராதம்!

மும்பையில் தெருநாய்கள் நள்ளிரவில் ஊளையிடுவதால் குடியிருப்பு வாசிகளுக்கு தூக்கம் கெட்டு போவதாக அதனை தடுக்கும் பொருட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தெருநாய்களுக்கு உணவளித்து வந்த பெண்ணிற்க்கு 8 லட்சம் அபராதம்!
Published on
Updated on
1 min read

மும்பையில் உள்ள என்.ஆர்.ஐ ஹவுசிங் காம்ளக்ஸ் கட்டிடத்தில் 40 குடியிருப்புகள் உள்ளன.இந்த குடியிருப்பை சேர்ந்த பெண்ணான அன்சு சிங் என்பவர் தெருநாய்களுக்கு கட்டிட வளாகத்தில் உனவளித்ததாக சொல்லப்படுகிறது.இதனை தொடர்ந்து அந்த பெண் நாய்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்த கோரி தடை விதிக்கப்பட்டது.ஆனால் அப்பெண் அவர் மீது வைத்துள்ள தடைகளையும் மீறி நாய்களுக்கு உணவளித்துள்ளார்.

அன்சு சிங் தடை செய்த விதிகளை மீறி நாய்களுக்கு உணவு அளித்து வந்த குற்றத்திற்காக ஹவுசிங் காம்ளக்ஸ் நிறுவனம் அவருக்கு நாள்தோறும் ரூபாய் 5 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.கடந்த ஜூலை முதல் அளிக்கப்பட்ட அபராதம் இன்று வரை ரூபாய் 8 லட்சத்துக்கு உயர்ந்துள்ளதால் இது சட்ட விரோதமான செயல் என அன்சு குற்றம் சாட்டியுள்ளார்.

இவரை போலவே மற்றொரு பெண் தெருநாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார் அவருக்கு  6 லட்ச ரூபாயினை அபராதமாக விதித்துள்ளது.

இது பற்றி ஹவுசின்ங் செயலாளர் கூறுகையில் “கட்டிடத்தில் சுற்றித்திரிந்து வரும் தெருநாய்களால் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் நடமாட அச்சப்பட்டு வருவதாகவும், வாகன நிறுத்துமிடம் மற்றும் பிற இடங்களை அசுத்தம் செய்து வருவதால் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார்.இப்படிப்பட்ட செயல்களால் இரவில் நிம்மதியான உறக்கம் இல்லை எனவும் அதனை தடுக்கும் பொருட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக கூறுகிறார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com