மீண்டும் ஒருமுறை சாதிக்குமா நாசா?!!

மீண்டும் ஒருமுறை சாதிக்குமா நாசா?!!
Published on
Updated on
1 min read

இந்த பணி வெற்றி பெற்றால், 2024-ல் சந்திரனைச் சுற்றி விண்வெளி வீரர்களை அனுப்பும் பணியை நாசா செயல்படுத்தும்.  இதற்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு வாகனத்தை தரையிறக்க நாசா முயற்சிக்கும்.

நாசாவின் ஓரியான்:

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவின் ஓரியன் கேப்ஸ்யூல் சந்திரனைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது.  ஆரம்ப கால தாமதங்களுக்குப் பிறகு, தற்போது நிலவு பயணம் வெற்றிகரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புளோரிடாவில் இருந்து சந்திரனை நோக்கி விண்கலம் ஒரு வாரத்திற்கு முன்பு ஏவப்பட்டது.  ஓரியன் ஒரு வாரக்கால அளவில் நிலையான சுற்றுப்பாதையில் இருக்கும். 

எதிர்காலத் திட்டம்:

இந்த பணி வெற்றி பெற்றால், 2024-ல் சந்திரனைச் சுற்றி விண்வெளி வீரர்களை அனுப்பும் பணியை நாசா செயல்படுத்தும். இதற்குப் பிறகு, 2025 ஆம் ஆண்டில் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு வாகனத்தை தரையிறக்க நாசா முயற்சிக்கும் என தெரிவித்துள்ளது.

நாசாவின் சாதனை:

50 ஆண்டுகளுக்கு முன்பு, அப்பல்லோ திட்டத்தின் கீழ் நாசா இந்த சாதனையை நிகழ்த்தியது.  அதன் பிறகு ஒரு கேப்சூல் சந்திரனை சென்றடைவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com