“ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை....” ருசிரா கம்போஜ்!!

“ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை....” ருசிரா கம்போஜ்!!
Published on
Updated on
1 min read

ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது சர்வதேச விதிகளை மீறுவதாகும்.  இது அரசியல் பதட்டத்திற்கு வழிவகுக்கும் எனவும் இது புறக்கணிக்க முடியாதது என்றும் கம்போஜ் கூறியுள்ளார். 

ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதிநிதி ருசிரா காம்போஜ், பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல்  கடுமையாகத் தாக்கி பேசியுள்ளார்.  ஐ.நா.வில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் மற்றும் ராணுவ உபகரணப் பரிவர்த்தனைகளைத் தடுப்பது குறித்த விவாதத்தில் பாகிஸ்தானை நேரடியாகத் தாக்கி பேசியுள்ளார்.  பாகிஸ்தானால் எல்லைக்கு அப்பால் இருந்து ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களை சட்டவிரோதமாக விநியோகிக்கும் சவாலை இந்தியா எதிர்கொள்கிறது என்று காம்போஜ் தெரிவித்துள்ளார். 

"சட்டவிரோத ஆயுதப் பரவல் தடைக்கு பக்கபலமாக இருக்கும் மற்றும் பயங்கரவாதிகளுடன் கூட்டுச் சேர்ந்த சில நாடுகள், இந்த தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறியுள்ளார்.  மேலும் ஆயுதங்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்வது என்பது சர்வதேச விதிகளை மீறுவதாகும் எனவும் இது அரசியல் பதட்டத்திற்கு வழிவகுக்கும் எனவும் இதுமற்றும் புறக்கணிக்க முடியாதது எனவும் கம்போஜ் பேசியுள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com