வீட்டில் இருந்த படியே நமக்கு பிடித்தமான உணவு வகைகளை ஆர்டர் செய்து ருசிப்பது வழக்கம்.சிலர் சமைக்க இயலாத போது ஆர்டர் செய்து சாப்பிடுவது என மக்கள் அனைவரும் அவரது செல்போன்களில் இந்த வகையான ஆப்புகளை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
வீட்டுக்கு உணவு டெலிவரி செய்து பார்த்திருப்போம், ஆனால் விண்வெளிக்கு உணவு டெலிவரி செய்து பார்த்திருப்போமா என கேட்டால் இல்லை என்பதே அனைவரது பதிலாக இருக்கும்.
இவையெல்லாம் ஒருபுறமிருக்க அனைத்து கேள்விகளுக்கும் பதில் தரும் வகையில் உபேர் ஈட்ஸ் நிறுவனம் சாத்தியமாக்கி உள்ளது.இந்த நிறுவனம் ஜப்பானிய மில்லியனர் மொகல் யுசாகு மேசாவாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்களுக்கு ஜப்பானிய உணவு வகைகளை அனுப்பி உள்ளது.
யுசாகு என்பவர் 12 நாள் பயணத்திற்காக சோயுஸ் விண்கலத்தில் விண்வெளிக்கு சென்றார்.இதையடுத்து அவர் விண்வெளி மையத்திலேயே தங்கியுள்ளார்.
அத்தகைய பொழுதில் டோர் பெல் அடிக்கப்பட்டது அதனை தொடர்ந்து அவர் திறக்கையில் உபேர் ஈட்ஸ் ல் டெலிவரி செய்யும் நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார். உள்ளே வந்த அவரிடம் இருந்து யுசாகு உணவு பார்சலையும் வாங்கி கொள்கிறார். அதன் பின் உணவும் அந்த பையும் உள்ளே மிதந்த படி இருக்கின்றன.
அதில் வைக்கப்பட்ட உணவு வகைகளில் கானங்கொளுத்தி வகை , இனிப்பு சாஸில் ஊற வைக்கப்பட்ட மாட்டிறைச்சி போன்றவைகள் யுசாகு விற்கு வழங்கப்பட்டதாக உபேர் ஈட்ஸ் செய்தி குறிப்பில் வெளியிட்டது.