”இங்கிலாந்து உக்ரைனுடன் தொடர்ந்து துணை நிற்கும்” ரிஷி சுனக்

”இங்கிலாந்து உக்ரைனுடன் தொடர்ந்து துணை நிற்கும்” ரிஷி சுனக்
Published on
Updated on
1 min read

உக்ரைனுடனான தனது முதல் பயணத்தின் போது, ​​ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பிரிட்டன் தொடர்ந்து உதவி செய்யும் என்று சுனக் அறிவித்தார்.

இறுதி வரை துணைநிற்கும்:

உக்ரை தலைநகரான கியேவ் பயணத்தின் போது, ​​ரிஷி சுனக் கூறுகையில், உக்ரைனுக்கு இங்கிலாந்து ஆரம்பத்தில் இருந்தே துணை நின்றது எனக்கு பெருமையாக உள்ளது எனவும் உக்ரைனுடனான போரின் முடிவில் பிரிட்டனும் நமது நட்பு நாடுகளும் துணை நிற்கும் என்பதைச் சொல்ல நான் இன்று இங்கு வந்துள்ளேன் எனவும் தெரிவித்தார்.

மேலும் ரஷ்ய இராணுவத்தை பின்னுக்குத் தள்ளுவதில் நமது உக்ரைன் ராணுவம் வெற்றி பெற்றதாகவும் சுனக் கூறினார்.  

தொடர்ந்து பேசிய சுனக் பொதுமக்கள் கொடூரமாக வானிலிருந்து குண்டுவீசித் தாக்கப்படுகிறார்கள் எனக் கூறியதோடு விமான எதிர்ப்பு துப்பாக்கிகள், ரேடார் மற்றும் ட்ரோன் எதிர்ப்பு உபகரணங்கள் உள்ளிட்ட புதிய வான் பாதுகாப்பு ஆயுதங்களை பிரிட்டன் உக்ரைனுக்கு வழங்கவுள்ளது என தெரிவித்தார்.

சுதந்திரப் போராட்டம்:

தொடர்ந்து சுனக் கூறுகையில், இது சுதந்திரத்திற்கான போராட்டம் என்பது பிரிட்டனுக்கு தெரியும் எனவும் அதனால்தான் நாங்கள் எல்லா வகையிலும் உக்ரைனுடன் இருக்கிறோம் எனவும் கூறினார்.  உக்ரைனுக்கு பிரிட்டன் விரைவில் 60 மில்லியன் டாலர் ராணுவ உதவி அளிக்கும் என்றும் தெரிவித்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com