கொரியப் போரால் பிரிந்துள்ள குடும்பங்களை ஒன்றிணைக்க வட கொரியாவுடன் பேச்சு வார்த்தை நடத்த தென்கொரியா முன் வந்துள்ளது. இது தொடர்பாக தென்கொரியாவின் தலைநகர் சியோலில் செய்தியாளர்களைச் சந்தித்த அந்நாட்டு உள்துறை அமைச்சர் வோன் யங் சே இந்த தகவலை தெரிவித்தார்.
இதற்காக நியமிக்கப்பட்டுள்ள இரு நாடுகளைச் சேர்ந்த அதிகாரிகளும் மிக விரைவில் நேரில் சந்தித்து பிரிந்து கிடக்கும் குடும்பங்களை மனிதாபிமான அடிப்படையில் சேர்த்து வைக்க பேச்சு வார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்தார். மேலும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கான தேதி, இடம் மற்றும் நிபந்தனைகளை தென்கொரியா பரிசீலிக்கும் என்றும் தெரிவித்தார்.