குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்!

முதன் முறையாக சிம்பன்சிகளைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் இந்தியாவில் அரங்கேறியுள்ளது. இச்சம்பவம் பெரும் பரபரப்பிஅ ஏற்படுத்தியுள்ளது.
குரங்கு குட்டிகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டிய கும்பல்!
Published on
Updated on
2 min read

இப்படியெல்லாம் கடத்துவார்களா? என்று பலருக்கும் பல வகையான கேள்விகள் வரும். குழந்தைகளை கடத்தி பணம் கேட்டு மிரட்டுவது, சிறுமிகள், குழந்தைகள், பெரியவர்கள் என மனிதர்களை தான் இது வரை நிஜ வாழ்க்கையில் கடத்தி பணம் கேட்டு மிரட்டும் சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், முதன்முறையாக தற்போது வித்தியாசமான ஒரு கடத்தல் சம்பவம் நடந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்ட மூன்று சிம்பன்சி குட்டிகளில் முதல் குட்டி- மோங்கா

சமீப காலங்களில், மிருகங்களை கடத்தி அவற்றை சட்ட விரோதமாக விற்கும் சம்பவங்கள் நடந்த படியாக இருக்கிறது. பாம்புகள், காட்டுப் பல்லிகள், முள்ளமன்றிகள் போன்றவற்றை சட்ட விரோதமாக கடத்தி அதனை லாபகரமாக விற்று சம்பாதிக்கும் ஆசாமிகள் ஒரு பக்கம் இருக்க, சரணாலயத்தில் இருந்து மூன்று சிம்பன்சிகளைக் கடத்தி, அவற்றை மீண்டும் கொடுக்க, லட்சக் கணக்கில் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடத்தப்பட்ட மூன்று சிம்பன்சி குட்டிகளில் இரண்டாம் குட்டி- சீசர்

மத்திய ஆப்ரிக்காவின் காங்கோ பகுதியில் உள்ள “ஜாக்” என்ற வனவிலங்கு காப்பகத்தில் இருந்து, மோங்கா, சீசர் மற்றும் ஹுசேன் என்ற மூன்று சிம்பன்சி குட்டிகளை மர்ம கும்பல் கடத்தி, “ஜாக்” வனவிலங்கு காப்பகத்தின் துணை நிறுவனரான ரோக்சேன் ஷாண்ட்ரோ-விற்கு வாட்சாப் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். அதுவும், லட்சக்கணக்கில் பணம் கேட்டு மிரட்டியதோடு, பணத்தைக் கொடுக்க மறுத்தால், அந்த குட்டிகளைக் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அது மட்டுமின்றி, அவரது இரண்டு குழந்தைகளையும் கடத்தி கொன்றுவிடுவதாக கூறியும் அவருக்கு வாட்சாப் மெசேஜுகளை அனுப்பி பதற வைத்த சம்பவம் காங்கோவில் நடைபெற்றுள்ளது.

கடத்தப்பட்ட மூன்று சிம்பன்சி குட்டிகளில் மூன்றாம் குட்டி- ஹுசேன்

40 சிம்பன்சிகள் மற்றும் 14 இனங்களைச் சேர்ந்த 64 குரங்குகள் தஞ்சம் கொண்ட “ஜாக்” வனவிலங்கு காப்பகத்தில், சட்டவிரோத விலங்கு கடத்தல் நடப்பது இது முதன்முறையல்ல. ஆனால், விலங்கைக் கடத்தி பணம் கேட்டு மிரட்டுவது, இது தான் முதன்முறை. காங்கோவில் மட்டுமல்ல, உலகளவிலும் தான். அதிலும், குறிப்பாக் இந்த சம்பவத்தில், குரங்கு குட்டிகளை போதைப்படுத்தி கடத்தியதாகத் தகவல்கள் கூறுவது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட இக்கட்டான சூழல், காங்கோவின் பிரசித்தியான இந்த காப்பகம் மட்டுமின்றி, ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள சுமார் 23 காப்பகங்களுக்கும் சேரும். ஏன் என்றால், ஏற்கனவே, பல குரங்குகள், மக்களின் ஈடுபாடுகளால் போது பொருட்கள் மற்றும் மதுவிற்கு அடிமையாகி அவற்றை மீண்டும் சரியாக்க கடுமையாக உழைத்து வருவதாகக் கூறப்படும் நிலையில், கடத்தல் போன்ற செயல்கள் மேலும் அச்சத்தை உருவாக்குகிறது.

அப்படி அவர்கள் கேட்கும் பணத்தை ஒரு வேளை கொடுத்து விட்டால், இது கண்டம் முழுவதும் ஒரு பெரிய தவறான முன்னுதாரணமாக அமைந்து விடும் என்பதில் ஐயமே இல்லை. இதனால், பணம் கொடுக்காமலேயே எப்படி அந்த சிம்பன்சிகளைக் கண்டுபிடிப்பது என பாதுகாப்பு துறை முயற்சி செய்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இச்சம்பவம் உலகளவில் பெரும் அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளது. ஏன் என்றால் ஆப்ரிக்காவில், யானை தந்தம் (ஐவரி), காண்டாமிருகம் கொம்புகள், பங்கோளின் செதில்கள் ஆகியவற்றில் கடத்தல்கள் அதிகமாகி, பல உயிரினங்கள் அழிவு நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சீனா, பாகிஸ்தான், எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் கோரிக்கைகளின் படி, குரங்கு போன்ற வனவிலங்கு செல்லபிராணிகள் தேவை என பல குரங்குகள் கடத்தப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து, கடத்தி பணம் கேட்பதும் பெரும் சர்ச்சையாகி வருகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com