வட கொரியாவில் முதல்முறையாக கொரோனா தொற்று உறுதிப்படுத் தப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 2.5 மில்லியன் மக்கள் காய்ச்சல் மற்றும் கொரோனா அறிகுறிகளுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
போதிய தடுப்பூசி கையிருப்பு மற்றும் பரிசோதனை உபகரணங்கள் வட கொரியாவின் வசம் இல்லாததால் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது.
இந்தநிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட அறிக்கையில், வட கொரியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தேவையான தடுப்பூசி மற்றும் பரிசோதனை உபகரணங்களை வட கொரியாவிற்கு உடனடியாக வழங்க தயாராக இருப்பதாக தெரிவித்து இருந்தார்.
அத்துடன் இந்த தடுப்பூசி பகிர்வை வட கொரியாவுடன் சேர்த்து சீனாவிற்கும் வழங்க அமெரிக்க தயாராக இருப்பதாக பைடன் கூறி இருந்தார். ஆனால் அமெரிக்கா வழங்க முன்வந்த தடுப்பூசி பகிர்வு குறித்து வட கொரியா இதுவரை எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என தகவ்ல வெளியாகியுள்ளது.