மடாஸ்கர் தீவு அருகே அந்நாட்டு அமைச்சர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் கடலில் விழுந்துள்ளது.மடாஸ்காரின் வடகிழக்கு கடற்கரை அருகே 130 பயணிகளை சட்ட விரோதமாக ஏற்றி சென்ற கப்பல் கடலில் கவிழ்ந்ததில் கப்பலில் சென்ற பயணிகளை மீட்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டது தொடர்ந்து ஹெலிகாப்டரில் அந்நாட்டு அமைச்சர் அதனை பார்வையிட புறப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர் புறப்பட்ட ஹெலிகாப்டர் திடீரென விபத்துக்கு உள்ளானது.கடலில் விழுந்த அவர் 12 மணி நேரம் நீந்தி கரற்கரைய அடைந்து உயிர் பிழைத்ததாக சொல்லப்படுகிறது.இவர் திங்கட்கிழமை மாலை 7;30 மணிக்கு நீந்த ஆரம்பித்தவர் மறுநாள் காலை 7;30 மணி வரை நீந்தி தீவை அடைந்ததாக அவர் கூறியுள்ளார்.
ஹெலிகாப்டரில் பயணித்த மற்றொரு அதிகாரியும் உயிர்பிழைத்ததாக சொல்லப்ப்டுகிறது.மேலும் கடலில் விழுந்த கேப்டன் அதிகாரி ஒருவரின் நிலை குறித்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை எனவும் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.