ஜப்பானில் கொரோனா வைரஸ்களுக்கு எதிராக... விஞ்ஞானிகள் தீக்கோழியின் உயிரணுக்களை கொண்டு உருவாக்கிய  முகமுடி...

தீக்கோழியின் உயிரணுக்கள் மூலம் உருவாக்கப்பட்ட முகமுடியை அணியும் போது வைரஸ் இருந்தால் அவை புற ஊதா நிறத்தில் ஒளிரும் எனத் தகவல்.
ஜப்பானில் கொரோனா வைரஸ்களுக்கு எதிராக... விஞ்ஞானிகள் தீக்கோழியின் உயிரணுக்களை கொண்டு உருவாக்கிய  முகமுடி...
Published on
Updated on
2 min read

இவ்வகையான முகமுடி கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அணிந்திருக்கும் போது அவை வாய் மற்றும் மூக்கு என அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புற ஊதா நிறத்தில் ஒளிரும் என்கின்றனர்.

கியோட்டோ ப்ரிஃபெக்சுரல் பல்கழைக்கழகத்தின் தலைவர் மற்றும் கால்நடை மருத்துவர் யசுஹிரோ சுகாமோட்டோ என்பவர்கள் இணைந்து நடத்திய ஆராய்ச்சியில்  கோவிட் 19 க்கான முகமுடிகளை தீக்கோழியின் ஆன்டிபாடிகளை வைத்து உருவாக்க திட்டமிடனர்.

மேற்கு ஜப்பானில் உள்ள கியோட்டோ ப்ரிஃபெக்சுரல் பல்கழைக்கழகத்தின் மருத்துவர்கள் மற்றும் அவரது குழுவினர் என அனைவரும் சேர்ந்து வீட்டிலேயே வைரஸை குறைந்த விலையில் பரிசோதித்து கொள்ள முடியும் என செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். கொரோனா வைரஸை குறிவைத்த விஞ்ஞானிகள் தீக்கோழி ஆன்டிபாடிகள் பூசப்பட்ட முகமுடியின் ஆராய்ச்சியை தொடங்கினர். இதனை பற்றிய முந்தைய ஆராய்ச்சியின் போது பறவைகள் நோய்க்கு வலுவான எதிர்ப்பை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

இதைபற்றிய ஒரு சிறிய ஆய்வில் சோதனைக்கு உட்பட்டவர்கள் முகமுடிகளை அணிய தொடங்கினர். எட்டு மணி நேரத்திற்க்கு பின் வடிகட்டிகள் அகற்றப்பட்டுள்ளன. இதில் வைரஸ் இருந்தால் புற ஊதா ஒளியின் கீழ் ஒளிரும் ரசாயணத்தை தெளிப்பதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் முகமுடி சுற்றி நிறம் மாறும் என தெரிவித்தனர்.

இதனை ரசாயணத்தை பயன்படுத்தாமல் வைரஸ் கண்டறியப்பட்டால், அவை  தானாகவே ஒளிரும் வகையில் முகமுடிகளை உருவாக்க குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

கால்நடை மருத்துவரும் பல்கழைகழகத்தின் தலைவரும் கடந்த பல ஆண்டுகளாக தீக்கோழியை ஆய்வு செய்ததில் அவை பறவைக் காய்ச்சல், ஒவ்வாமை மற்றும் பிற நோய்களை எதிர்த்துப் போராடும் வகையில்  எதிர்ப்பு சக்தி இருந்ததை  கண்டறிந்துள்ளனர்.

இதனை கோவிட் 19 வைரஸுக்கு எதிராக இதன் தரத்தை கண்டறிய  நடத்தப்பட்ட சோதனையில்  ஒரு நிலையான முடிவு கிடைத்திருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com