இந்து முறைப்படி இந்திய மணமகனை மணந்த துருக்கி மணப்பெண்....நாடு கடந்த காதல்..

வெளிநாட்டை சேர்ந்த பெண்  ஒருவர் இந்தியரை காதல் கொண்டு இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
இந்து முறைப்படி இந்திய மணமகனை மணந்த துருக்கி மணப்பெண்....நாடு கடந்த காதல்..
Published on
Updated on
1 min read

காதலுக்கு இனம்,மதம்,கலாச்சாரம் என எவ்வித எல்லையும் பார்க்கப்படுவதில்லை.சமீபத்தில் ஆந்திர மாநிலம் குண்டூர்ல் நடந்த திருமண விழா ஒன்று இதனை மீண்டும் நிரூபிக்கும் விதமாக நடத்தியுள்ளனர்.துருக்கிய பெண் ஒருவரும் இந்திய ஆண் ஒருவரும் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்திருப்பது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது.

இந்திய மணமகன் மது சங்கீர்த் 2016 ஆம் ஆண்டின் போது மணமகள் ஜிஜெமை பணி தொடர்பாக தொடர்ந்த பிராஜெக்ட் ஒன்றில் சந்தித்துள்ளார்.இதன் பின் இருவர்களும் நல்ல நண்பர்களாக இருந்து வந்ததாக தெரிகிறது.சிறிது காலம் சென்ற பின்னர் மது வேலை சம்மதமாக Gizem வசித்து வந்த துருக்கிக்கு சென்றுள்ளார்.இருவரின் நட்பு காதலாக மாற தொடங்கியுள்ளது.இதன் பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவுகளை எடுத்துள்ளனர்.

இதில் இருவரது குடும்பமும் திருமணதிற்கு அவ்வளவு எளிதாக ஒப்புக்கொள்ளவில்லை எனவும் தாமதமாகவே சம்மதம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.இரு தரப்பினரின் ஒப்புதலுக்கு பின்னதாக இருவரின் திருமணத்திற்காக நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் முதலில் 2019 ஆம் ஆண்டு அவர்களின் நிச்சயம் செய்து முடிக்கப்பட்டதாக கூறியுள்ளனர்.கோவிட் தொற்று காரணமாக அவர்களின் திருமணம் தள்ளிப்போனதாக சொல்லப்படுகிறது.

இறுதியாக இந்த ஜோடியானது கடந்த ஜூலை மாதம் துருக்கிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.பின்னர் இந்தியாவில் இந்து பாரம்பரியப்படி தெலுங்கு மற்றும் இந்து முறைப்படி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து திருமணத்தை கோலாகலமாக நடத்தியுள்ளனர்.மேலும் மணமகள் கணவரின் வீட்டாரோடு சரலமாக பழகுவதற்காக தெலுங்கு மொழியை ஆர்வத்தோடு கற்றுக் கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com