துபாய் நகரில் குடியிருப்புகளில் உள்ள பொதுமக்கள் பால்கனியை பயன்படுத்துவது குறித்து அவர்களுக்கு நகராட்சி மூலம் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
குடியிருப்பு வாசிகள் அனைவரும் துபாய் நகராட்சியை அழகியல் தோற்றமளிக்கும் விதமாக அதனை பராமரிக்க வேண்டும் எனவும் அடுக்குமாடியில் இருந்து வரும் பால்கனிகளை தவறாக பயன்படுத்தும் முறையை மாற்றிக்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.
குடியிருப்புவாசிகளான பொதுமக்கள் அனைவரும் தங்கள் பால்கனியை தவறுதாலாக பயன்படுத்தி சமூகப் பிரச்சனைகளை வளர்த்துக்கொள்ள கூடாது என தெரிவித்த அரசு பார்போரின் கண்களை உறுத்தும் வகையில் எவ்வித செயல்களும் பால்கனியில் இருத்தல் கூடாது எனவும் தெரிவித்துள்ளது.
இதனிடையே நிலையான சுற்றுசூழல் மற்றும் அதன் தர நிலைகள் குறித்தும் சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நகரத்தின் அழகியல் மற்றும் நாகரீக தோற்றத்தை சிதைத்து வருவதை தவிர்த்தல் வேண்டும் என அனைத்து ஐக்கிய அரபு எமிரேட் குடியிருப்பாளர்களை துபாய் நகராட்சி சார்பில் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகின்றனர்.
இதில் பொதுமக்களுக்கு பின்பற்றும் விதமாக அவர்கள் கூறியிருப்பதாவது...
1.துணிகளை காயப்போடுதல் கூடாது
2.சிகரெட் துகள்களை பால்கனியில் இருந்து வெளியே வீசக் கூடாது.
3.பால்கனியில் இருந்து குப்பகளை வீசக் கூடாது.
4.பால்கனியை கழுவும்போது அந்த அழுக்கு தண்ணீர் வெளியே வரக்கூடாது.
5.பறவைகளுக்கு பால்கனியில் உணவளிக்க கூடாது.
6.பால்கனியில் தொலைக்காட்சிக்கான ஆண்டென்னா மற்றும் டிஷ் போன்றவைகளை மாட்டக்கூடாது..
இது போன்ற விதிமுறைகளை பொதுமக்களிடையே விதித்து வருகின்றனர்.மேலும் தவறாக பயன்படுத்தினால் அவர்களுக்கு 500 முதல் 1500 திர்ஹாம் வரை அபராதமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.