ஆப்கானிஸ்தானில் தற்போது தாலீபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் கடுமையான சட்ட திட்டங்களை மக்களின் மீது அவர்கள் திணிக்கப்பட்டு வருகின்றனர்.இவர்கள் அமல்படுத்தப்பட்டு வரும் கடுமையான சட்டங்களுக்கு உலக நாடுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளில் உள்ளவர்கள் என அனைவரும் கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.
இதற்கிடையில் ஆண்கள் துணையின்றி தற்போது பெண்கள் வெளியில் செல்ல கூடாது என்னும் சட்டத்தினை அமல்படுத்தி உத்தரவிட்டுள்ளனர். இதை பற்றிய அவர்கள் குறிபிட்டுள்ள அறிக்கையில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேலாக பயணம் செய்து செல்லும் பெண்கள் நெருங்கிய அதாவது ஆண் உறவினர்களின் அடிப்படையில் அவர்களுக்கு துணையாக அழைத்து செல்லுதல் வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதே போன்று தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பி வந்த பெண்களின் தொடர்கள் என அனைத்திற்கும் கடந்த வாரம் இனி வரும் காலங்களில் ஒளிபரப்புதல் கூடாது என தடை விதித்தனர்.
அதே போல் தொலைக்காட்சியில் பணிபுரியும் பெண்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் பணிக்கு செல்லும் பொழுது ஹிஜாப் அணிவது கட்டாயம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.