துருக்கி நாட்டின் ஹடாய் மாகாணம் இஸ்ஹெண்டிரூன் மாவட்டத்தை சேர்ந்த ஹசிம் ஓசன் செடிக் என்பவரும் பெர்பின் ஓசிக் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். காதலர்களாக வலம் வந்த இருவருக்கும் சிறிய கருத்து வேறுபாடுகள் தொடர்ந்த நிலையில் அதுவே இருவருக்கும் பிரிவதற்கான வழியாக அமைந்துள்ளது.
இதன் காரணமாக ஹசிம் காதல் தோல்வியில் நீ எனக்கு கிடைக்கவில்லை எனில் யாவருக்கும் கிடைக்க கூடாது என முடிவு செய்து காதலி பெர்பின் ஓசிக் மீது ஆசிட் வீசி சென்றுள்ளார்.ஆசிட் வீசியதில் பெர்பினின் உடல் மற்றும் முகம் என அனைத்தும் பாதிப்பிற்குள்ளானது. இதனை தொடர்ந்து ஹசிம் ஓசன் காதலி முகத்தில் ஆசிட் வீசிய குற்றத்திற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட ஹசிம் ஓசன் காதலிக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பியுள்ளார்.அதில் என்னை மன்னித்து விடும் படி கேட்டுக்கொண்டுள்ளார். மன்னிப்பு கடிதத்தை ஏற்ற பெர்பின் ஹசிம் ஓசனிற்கு பதில் அளித்து மறு கடிதம் எழுதியுள்ளார்.இது நாளடைவில் இருவருக்கும் இடையெ முடிந்த காதல் மெல்ல தொடர ஆரம்பித்துள்ளது.
இதனை தொடர்ந்து தனி அறையில் தண்டனையை அனுபவித்த ஹசிம் ஓசன் தண்டனைக்காலம் முடிவடைந்து திறந்த வெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.கொரோனா பரவல் காரணமாக சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை மே மாதம் விடுவித்துள்ளனர்.
இதற்கிடையே சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த ஹசிமை திருமணம் செய்துகொள்ள பெர்பிக் சம்மதம் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து தன் மீது ஆசிட் வீசிய நபரான முன்னாள் கதலனையே அவர் திருமணம் செய்து கொண்டு தற்போது அவர்கள் இருவரும் தம்பதியாக இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.