சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சிங்கங்களால் நிலவிய பரபரப்பு!! 

கூண்டுகளில் அடைத்து கொண்டுவரப்பட்ட சிங்கங்கள் தப்பி சென்றாதால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சிங்கப்பூர் விமான நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற சிங்கங்களால் நிலவிய பரபரப்பு!! 
Published on
Updated on
2 min read

பொதுவாக வன விலங்குகளை ஒரு நாட்டில் இருந்து மற்றோரு நாட்டிற்க்கு அனுப்பி வைப்பது வழக்கம். சீனா தனது நட்பு நாடுகளுடன் பாண்டா கரடிகளை அனுப்பி வருகின்றனர். இப்படிப்பட்ட செயல்களை கையாளும் போது கவனம் செலுத்துவது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. 

விமானம் மற்றும் கப்பல்களில் கூண்டுகள் மூலம் அடைத்து, பாதுகாப்பன முறையில் அதற்க்கு தேவையான உணவு வகைகளையும் முன்னெச்சரிக்கையாக தயார் செய்து கொண்டு செல்வார்கள்.மேலும் வன விலங்குகளை கொண்டு சேர்க்கும் வரையில் அவற்றிற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படமால் இருக்க தகுந்த மருத்துவ ஏற்பாடுகளும் முன்கூட்டியே செய்யப்பட்டிருக்கும்.

இத்தகைய ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டிருந்த சூழலிலும் சிங்கங்கள் கண்டெய்னர் கூண்டுகளில் இருந்து தப்பியுள்ளன.இதனையடுத்து தப்பிய சிங்கங்களுக்கு அங்கிருந்த அதிகாரிகள் மயக்க ஊசியை செலுத்தி உள்ளனர்.

தப்பித்த சிங்கங்களுக்கு மயக்க ஊசியை செலுத்திய பின் மாண்டாய் வனவிலங்கு மையத்தின் கட்டுபாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக  தகவல் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமான நிலையத்திற்க்கு மொத்தம் 7 சிங்கங்கள் எடுத்து வரப்பட்டதாக தகவல்கள் வெளியாகியன. இதையடுத்து இரண்டு சிங்கங்கள் மட்டுமே தப்பித்ததாகவும் தெரிவித்தனர்.

வேறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட இருந்த 7 சிங்கங்களில் இரண்டு மட்டுமெ தப்பித்தது நல்வாய்ப்பாக கருதி வருகின்றனர்.7 சிங்கங்களும் தப்பி இருந்தால் பெரும் பரபரப்பு நிலவி சுழல் கடினமாகியிருக்கும் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் விமான சேவைகள் எதுவும் பாதிக்கப்படவில்லை எனவும், இது குறித்து சிங்கப்பூர் ஏர்னலைன்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இந்த சம்பவத்தில் சிங்கங்களின் உடல்நலன் தான் முக்கியம் எனவும் மாண்டாய் வனவிலங்கு குழுவுடன் இணைந்து அதன் உடல்நிலையை கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. இது தொடர்பாகச் சிங்கப்பூர் ஏர்னலைன்ஸ் உடன் நாங்கள் தொடர்பிலேயே உள்ளோம்" எனக் மாண்டாய் குழு கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இப்படி வனவிலங்குகள் தப்பிச்செல்லும் சம்பவம் நிகழ்வது முதல்முறை அல்ல எனவும் கடந்த 2005 ஆம் ஆண்டின் போது உயிரியல் பூங்காவில் இறைச்சியை போடும் துளை வழியாக ஏஞ்சல் என்ற  ஜாக்குவார் தப்பித்ததால் பூங்காவில் இருந்த 500 கும் மேற்பட்டோர் உடனடியாக வெளியேற்ற பட்டதாகவும், அதனை தொடர்ந்து 30 நிமிடத்தில் ஜாக்குவாரை பிடித்ததாக தெரிவித்தனர்.அதோடு 2019 ல் லிம் சு காங் பண்ணையில் இருந்த காளை ஒன்று தப்பித்து 14 மணி நேரம் வெளியே சுற்றி திரிந்ததாகவும் தெரியப்படுத்தினர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com