மேற்கு லிபிய கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கியுள்ள உடல்களை பற்றிய தகவல்களை அந்நாட்டு செம்பிறை சங்கம் ஆராய்ந்து வருவதாக சொல்லப்படுகிறது.தலைநகர் திரிபோலியில் இருந்து சுமார் 90 கி.மீட்ரட் தூரத்தில் அமைந்துள்ள கோம்ஸ் துறைமுக நகரில் வெவ்வேறு இடங்களில் இருந்து சனிக்கிழமை அன்று கண்டுபிக்கப்பட்டுள்ள இந்த சடலங்களில் ஒரு பெண் குழந்தையும் இரு பெண்களின் உடகளும் கரை ஒதுங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரை ஒதுங்கிய அகதிகளில் சிலருக்கு உயி இருந்ததாகவும் அவர்களை காப்பாற்றி வந்ததாகவும் சொல்லப்படுகிறது.மேலும் மீதமுள்ள பயணிகளின் நிலையை குறித்து தேடுதல் பணியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த அகதிகளின் உடல்கள் திடீரென கரை ஒதுங்கியதற்கான காரணங்களை பற்றிய ஆய்வுகளில் பல நாட்களுக்கு முன்பு நிகழ்ந்த படகு விபத்தில் இவர்கள் சிக்கி இருக்க வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
லிபிய கடற்கரைக்கு அப்பால் நிகழ்ந்த படகு விபத்தில் இந்த அகதிகள் கடலில் முழ்கியிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.இதனை தொடர்ந்து ஆப்பிரிக்க மற்றும் ஆசிய குடியேறிகள் ஐரோப்பாவை நோக்கி பயணிக்கும் போது லிபிய் கடற்கரை பகுதி ஒரு பிரதான சாலையாக இருந்து வருகிறது என்பது குறிபிடத்தக்கது.இந்த ஆண்டில் இதுவரையிலான மத்தியக் கடற்கரை பாதையில் ஏற்பட்ட அகதிகளின் படகு விபத்தில் இதுவரை மட்டுமே 1500 பேர் உயிரிழந்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.