இலங்கையில் மக்களின் போராட்டம் காரணமாக அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே மாலத்தீவுக்கும் அதன் பின்பு சிங்கப்பூருக்கு தப்பி சென்றார்.
சிங்கப்பூரில் தங்கி இருப்பதற்காக விசா காலம் முடிவடைந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட்11 ஆம் தேதி தாய்லாந்து நாட்டுக்கு சென்றார். அங்கு 90 நாட்கள் தங்கியிருக்க தாய்லாந்து அரசு அனுமதி வழங்கி உள்ளது.
தலைநகர் பாங்காக்கில் உள்ள ஒரு நட்சத்திர விடுதியில் கோத்தபய ராஜபக்சே தங்கி உள்ளார். பாதுகாப்பு காரணங்களுக்காக ஓட்டல் அறையிலேயே இருக்கும்படியும், வெளியில் வர வேண்டாம் என்றும் கோத்தபய ராஜபக்சேவிடம் தாய்லாந்து போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.