இந்தோனேசியாவில் இன்று காலை திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு ஆசியப் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடான இந்தோனேசியாவில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நிலநடுக்கம் மட்டுமின்றி எரிமலைகள் சூழ்ந்து இருப்பதால், அவை அவ்வப்போது வெடித்தும் வருகிறது.
இதனிடையே, இன்று காலை சுலாவேசி அருகே கோடமோபாகுவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி ஒன்றாக பதிவாகியுள்ளது. காலை நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் காரணமாக அதன் அண்டை நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: வீழ்ச்சியடையும் உலக பொருளாதாரம்....காரணம் என்ன?!!!