இத்தாலியின் ஸ்ட்ராம்போலி எரிமலை வெடித்து எரிகுழம்புகளை வெளியேற்றி வருவதால் கரும்புகை மூட்டம் நிலவுகிறது. இத்தாலியின் தென்கிழக்கு கடலோர பகுதியில் உள்ள ஸ்டிராம்போலி எரிமலை மீண்டும் உயிர்பெற்று எரிகுழம்புகளை வெளியேற்றி வருகிறது.
இந்த குழம்புகள் நேரடியாக கடலில் கலந்து வந்தாலும், அதன் துகள்கள் சுற்றுசூழலுடன் கலந்து கரும்புகை மூட்டம் நிலவுகிறது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக கடற்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.