தென் கொரியா ஒரு குரைக்கும் நாய்...கடுமையாக விமர்சித்த வட கொரியா...

தென் கொரியா ஒரு குரைக்கும் நாய்...கடுமையாக விமர்சித்த வட கொரியா...
Published on
Updated on
1 min read

வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன்னின் சகோதரி கிம் யோ-ஜோங், நாட்டின் உளவு செயற்கைக்கோள்கள் மற்றும் பிற இராணுவ திறன்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தும் மதிப்பீடுகளை விமர்சித்துள்ளார்.

கண்டனம்: 

தென்கொரிய செய்தி நிறுவனம் உளவு ஏவுகணை தொடர்பாக இரண்டு படங்களை வெளியிட்டிருந்தது. அவர்களது மதிப்பீடு கவனக்குறைவாக இருப்பதாக அவர்கள் நினைக்கவில்லையா என்று தொழிலாளர் கட்சியின் மூத்த அதிகாரியான கிம் யோ-ஜாங் கூறியுள்ளார்.  மேலும் செயற்கைக்கோள் படங்கள் குறித்த தென் கொரிய நிபுணர்களின் கருத்துக்களுக்கு அவை அனைத்தும் ”முட்டாள்தனமான கருத்துகள்” எனவும் வடகொரியாவிற்கு ”தீங்கிழைக்கும் அவமதிப்பு” என்றும் பேசியுள்ளார்.  மேலும் தென் கொரியாவை ”குரைக்கும் நாய்கள்” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.  

அர்த்தமற்றவை:

தொடர்ந்து பேசிய கிம் யோ-ஜாங் செயற்கைக்கோள் சோதனையின் போது ஒரு பொதுவான கேமரா பயன்படுத்தப்பட்டது எனவும் ஏனெனில் ஒரு முறை சோதனைக்காக விலையுயர்ந்த, உயர் தெளிவுத்திறன் கொண்ட கேமராவைப் பயன்படுத்துவதில் அர்த்தமில்லை எனவும் கூறியுள்ளார்.  வடகொரியா இரண்டு பழைய ஏவுகணைகளை விண்வெளி ஏவுகணைகளாக பயன்படுத்தியுள்ளது என்ற தென்கொரியாவின் கருத்தையும் அமெரிக்காவை குறிவைக்கும் அளவுக்கு வடகொரியாவிடம் தொழில்நுட்பம் இல்லை என்ற தென் கொரியாவின் குறைவான மதிப்பீட்டையும் அவர் நிராகரித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com