இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவானது வலுவானதாக இருக்க அவற்றிற்கிடையேயான குறிக்கோளானது வலுவானதாக இருக்க வேண்டும்.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான போர் முடிவுக்கு வராத அதே நேரத்தில் மாஸ்கோவிற்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உறவுகள் நெருக்கமாகி வருகின்றன எனவும் இத்தகைய சூழலில் இந்தியா ரஷ்யாவை பாதுகாப்பான நண்பராக கருத முடியாது எனவும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கன்னா கூறியுள்ளார்.
மேலும் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான உறவானது வலுவானதாக இருக்க அவற்றிற்கிடையேயான குறிக்கோளானது வலுவானதாக இருக்க வேண்டும் எனவும் எல்லையில் உள்ள ஆக்கிரமிப்பை நீக்குவதற்காக ரஷ்யாவை இந்தியா பாதுகாப்பான நண்பனாக கருதும் என தான் நினைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பை இந்தியா கண்டிக்கவில்லை எனவும் ரஷ்யா-உக்ரைன் போர் குறித்து இந்திய பிரதமர் ஐநா அவையில் பேசியிருந்தாலும் போரை நிறுத்துவதற்கான வாக்கெடுப்பில் விலகியே இருந்தார் எனவும் கூறியுள்ளார் ரோ கன்னா.
-நப்பசலையார்