கம்பியூட்டர்கள் முதல் ரோபோக்கள் வரை அனைத்தையும் உருவாக்கியுள்ள சீனா தற்போது செயற்க்கை நுண்ணறிவு பொருத்தப்பட்ட முதல் வகையான ரோபோவை தற்போது உருவாக்கி அதனை நீதிபதியாக செயல்படுத்தி வருகின்றனர்.
மேலும் இந்த வகையான ரோபோக்களுக்கு A1 என பெயரிட்டதோடு நீதிபதியாகவும் பொறுப்பேற்க்க வைத்துள்ளனர்.இந்த நீதிபதியை ஷாங்காய் புடாங் மக்கள் வழக்கறிஞரால் தயாரிக்கப்பட்டதாகவும், மேலும் இந்த நீதிபதியானது வாய்மொழி வழக்கறிஞர்களின் வாதங்களை கேட்டு 75 சதவீதம் சரியான தீர்ப்புகளை குற்றவாளிக்களுக்கு அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.இதனை சீனா தயாரித்தது தொடர்ந்து தொழில்நுட்பத்தின் உதவியில் இந்த வகையான ரோபோக்கள் இருப்பதால் வழக்கறிஞர்களின் பணிச்சுமைகள் குறையும் என அவர்கள் நம்பி வருவதாக கூறியுள்ளனர்.
சில வழக்குகளில் இந்த A1 நீதிபதியானவர் விசாரணையை கேட்டு தீர்ப்புகளை வழங்க முடியும் என அவற்றை ஆராய்ந்ததில் நீதிமன்ற அலுவலகம் கூறியுள்ளது.இந்த இயந்திரத்தை டெஸ்க்டாப் என சொல்லப்படும் கணினியின் மூலம் பயன்படுத்தும் வகையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த A1 நீதிபதியானது செயற்க்கை நுண்ணறிவு பொருத்தப்பட்டதில் இவை தனது அமைப்பில் உள்ள பல பில்லியன் கணக்குகளை தரவாக பகுப்பாய்வு செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.இந்த நீதிபதியை உலகில் உள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை அடிபடையாக வைத்து உருவாக்கப்பட்டதாகவும் அந்த வழக்குகளானது 2015 ஆம் ஆண்டு முதல் 2020 வரையிலானவை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்த நீதிபதியானது ஆபத்தான ஓட்டுநர்கள்,கிரெடிட் கார்ட் மோசடி அதனுடன் திருட்டு குற்ற சம்பவங்களை மட்டுமே தீர்த்து வைத்து தீர்ப்பு அளிக்கப்படும் வகையில் உள்ளதாகவும் இதனை பற்றிய கருத்துகளில் சீன மக்களிடம் பொதிய வரவேற்ப்புகளை பெற வில்லை எனவும் கூறுகின்றனர்.
மேலும் இதுகுறித்து கூறுகையில் ஒரு வழக்கறிஞர் ஆனவர் தொழில்நுட்ப ரீதியாக 97 சதவீதம் துல்லியமாக தீர்ப்பு வழங்கலாம் அது சரியானதாக இருக்கும் ஆனல் இந்த வகையான செயற்க்கை நீதிபதி செயலில் இருக்கும் போது தவறு ஏற்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அப்படி நடந்தால் யார் பொறுபேற்ப்பது என்றவாறெல்லாம் பல கேள்விகளை முன்னிலை படுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
A1 என்னும் செயற்க்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்த நீதிபதியால் தவறை கண்டறிவது என்பது முடிந்த ஒன்றாகும் அதனை அனைவராலும் ஏற்றுக் கொள்ளவும் இயலும் ஆனால் அதனால் மனிதர்களின் இடத்தை எடுத்துக் கொள்ள முடியாது அவர்களுக்கு சமமாக இந்த செயற்க்கை நுண்ணறிவு நீதிபதியால் செயல்படவும் முடியாது என வழக்கறிஞர் ஒருவர் கூறியுள்ளார்.இந்த செயற்க்கை நுண்ணறிவு துறையால் சீனா மற்றும் ரஷ்யா மத்தியில் அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரித்தானிய உளவு நிறுவனம் எச்சரித்து வரும் நிலையில் A1 துறையில் சீனா இந்த சாதனையை நிகழ்த்தியதாக தெரிவித்துள்ளது.