மே 24ல் குவாட் மாநாடு...!!

மே 24ல்  குவாட் மாநாடு...!!
Published on
Updated on
1 min read

ஆஸ்திரேலியாவில் மே மாதம் 24ம் தேதி நடைபெறவுள்ள குவாட் உச்சி மாநாடிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். 

பசிபிக் கடல் மற்றும் இந்திய பெருங்கடலில் வளர்ந்து வரும் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய 4 நாடுகள் இணைந்து 2007 ஆம் ஆண்டு குவாட் என்ற நாற்கர கூட்டணியை உருவாக்கின.  இதன் உறுப்பு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு மற்றும் வர்த்தக மாநாடுகள், தகவல் பரிமாற்றங்கள் மற்றும் போர்ப்பயிற்சி ஆகியவை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்த நிலையில், ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் குவாட் கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் மே மாதம் 24ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகளை மேலும் அதிகப்படுத்தும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ்  குறிப்பிட்டுள்ளார். இதில் இந்திய பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் நான்கு நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கவுள்ளனர். 

இந்திய பெருங்கடலில்  சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த குவாட் கூட்டமைப்பில் கலந்து கொள்ளும் அதேவேளையில் சீனாவுடனான வர்த்தக மற்றும் இராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்த ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பின் இராணுவ அமைச்சர்கள் மாநாட்டை நாளை டெல்லியில் நடத்த உள்ளது. இதற்காக சீன பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜெனரல் லீ ஷாங் ஃபூ நாளை இந்தியாவிற்கு வருகிறார் என்பது  குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com