ஜி-20ல் இந்தோனேசியா இந்தியா உறவு குறித்து பிரதமர் மோடி!!!

ஜி-20ல் இந்தோனேசியா இந்தியா உறவு குறித்து பிரதமர் மோடி!!!
Published on
Updated on
1 min read

21ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் இந்தோனேசியாவும் தோளோடு தோள் இணைந்து செயல்படுகின்றன.  இந்தியாவில் இருந்து வந்த மக்களை இந்தோனேஷியா  அன்புடன் ஏற்றுக்கொண்டது.

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற இந்திய சமூகத்தினரின் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி மக்களின் வாழ்த்துக்களை ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மோடி, ”பாலிக்கு வந்த பிறகு ஒவ்வொரு இந்தியருக்கும் வித்தியாசமான உணர்வு இருப்பதாக எண்ணுகிறேன்.  நானும் அவ்வாறுதான் உணர்கிறேன்” என்று கூறினார்.  

மேலும், ”இந்தியாவுடன் பல்லாயிரம் ஆண்டுகளாக உறவு வைத்திருக்கும் இந்தோனேஷியாவை பற்றி நாம் கேள்விப்பட்டுக் கொண்டே இருக்கிறோம்.  தலைமுறை தலைமுறையாக அந்த பாரம்பரியம் முன்னோக்கி கொண்டு செல்கிறது.  அதை நாம் எப்போதும் விட்டு விடவில்லை.” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய மோடி “இன்று நான் உங்களுடன் பேசும் நேரத்தில், பாலியில் இருந்து 1500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மகாநதி கரையில் உள்ள கட்டாக் நகரில் பாலி யாத்ரா திருவிழா நடந்து வருகிறது” என்று கூறினார்.  

மேலும், “இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான ஆயிரக்கணக்கான வருட வர்த்தக உறவுகளின் கொண்டாட்டம் இந்த பண்டிகை.  கோவிட் காரணமாக சில தடைகள் இருந்தன, ஆனால் இப்போது பாலி ஜாத்ரா லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்புடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார்.

21ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் இந்தோனேசியாவும் தோளோடு தோள் இணைந்து செயல்படுகின்றன என்று கூறினார் பிரதமர் மோடி.  மேலும், “இந்தியாவிலிருந்து வந்த மக்களை அன்புடன் ஏற்றுக்கொண்டது இந்தோனேஷியா.  ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல் அவர்களை தனது சமூகத்திலும் சேர்த்து கொண்டது.” என்று தெரிவித்தார் பிரதமர் மோடி.

தொடர்ந்து பேசிய அவர், “இந்தியாவும் இந்தோனேசியாவும் இணைந்திருப்பது மகிழ்ச்சிக்காக மட்டும் அல்ல.  இன்பத்திலும் துக்கத்திலும் பரஸ்பரம் துக்கத்தைப் பகிர்ந்து கொள்வதற்காகவுமே இணைந்துள்ளோம்” என்று தெரிவித்தார்.  

மேலும் “2018 இல் இந்தோனேசியாவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டபோது, ​​இந்தியா உடனடியாக ஆபரேஷன் சமுத்திர மைத்ரியைத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது” எனக் கூறினார் மோடி. 

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com