பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் சூழலிலும், மருத்துவத்துறை அதிகாரிகள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தானில் கடந்த ஒரு வாரமாகவே வெப்ப நிலை குறைந்துள்ளது. காபூல் உள்ளிட்ட இதர மாகாணங்களிலும் கடும்பனி நிலவி வருகிறது. மேலும், கடுப்பனிப்பொழிவின் காரணமாக மட்டும் 8 நாட்களில் 70 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், பாகிஸ்தானின் நிர்வாகப் பகுதியான நீலம் பள்ளத்தாக்கில் உள்ள குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்காக கடும் பனியையும் பொருட்படுத்தாமல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதற்காக உலகமெங்கிருந்தும் அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அழிவின் விளிம்பில் கடல் பசுக்கள்....