பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போக்குவரத்துறை ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் எலிசபெத் போர்னே வெளியிட்ட அறிக்கையில், 2030ஆம் ஆண்டுக்குள் ஓய்வு பெறும் வயதை 60இல் இருந்து 64ஆக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு பணி செய்பவர்களால் மட்டுமே குறைந்தபட்ச ஓய்வூதியத்தை பெற இயலும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2027ஆம் ஆண்டு முதல் 43 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே முழு ஓய்வூதியத்தை பெற முடியும் என்றும் அறிவித்துள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 11ஆம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொள்ளுமாறு பொது தொழிலாளர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தண்ணீரில் செல்லும் கார்.... வாங்க பயணிக்கலாம்!!!