வட கொரியாவில் ஜனநாயகம் என்றாலெ கிலோ என்ன விலை என்ற கதையின் படி தான் இருந்து வருகிறது. அந்த வகையில் அப்பகுதியை சேர்ந்தோர் சிலர் தென் கொரியாவை சேர்ந்தவர்களின் இசை வீடியோக்களை பார்த்துள்ளனர்.அதனுடன் அவ்வீடியொக்களை பகிர்ந்தும் உள்ளனர் இதற்காக அந்த 7 நபர்களை பொது இடத்தில் பகிரங்கமாக தூக்கிலிட மனித உரிமை அறிக்கை மூலம் அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன்னின் ஆட்சியின் கீழ் வழங்கப்பட்ட மரணதண்டனைகள் குறித்தும் இடைக்கால நீதிப் பணிக்குழு கண்டறிந்துள்ளதாக அறிக்கை ஒன்றின் மூலம் கூறப்படுகிறது.
மேலும் மரணதண்டனைகலள் மூலம் கொள்ளப்பட்ட நபர்களை புதைக்கப்பட இடங்களை கண்டறிவதற்காக அந்நாட்டில் இருந்து வெளியேறிய மக்களிடம் தகவல்கள் சேகரிக்கப்பட்டும் வந்துள்ளது. இந்த 7 பேரில் ஆறு பேர் 2012 ஆம் மற்றும் 2014 ஆண்டுகளுக்கு இடையில் கொல்லப்பட்டுள்ளனர்.
வட கொரியாவில் கிம் ஜாங் உன்னின் ஆட்சியின் கீழ் இதுவரை குறைந்தது 23 மரணதண்டனைகள் நிறைவெற்றப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது.மேலும் இப்படிப்பட்ட தண்டனைகள் அனைத்தும் அவர்களின் குடும்பத்தின் முன்னால் நடத்தப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.
2011 ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து சர்வதிகாரியான கிம் ஜாங் உன் தென் கொரிய பொழுது போக்கு அம்சங்கள் சினிமா இசை போன்றவற்றை வட கொரியர்களின் மனதை கெடுக்கும் என கூறி அதனை தடை செய்ததோடு மட்டுமல்லாமல் சந்தர்ப்பங்களில் கடுமையான தண்டனைகளை பொதுமக்களிடையே வகுத்தும் வருகிறார்.