அதிக மருந்துகள் உட்கொண்டதால் கொரோனாவை மிஞ்சிய உயிரிழப்புகள்...

கடந்த 20 ஆண்டுகளில் மருந்துகளை அளவுக்கு அதிகமாக எடுத்து கொண்டதால் இதுவரை 9.3 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிக மருந்துகள் உட்கொண்டதால் கொரோனாவை மிஞ்சிய உயிரிழப்புகள்...
Published on
Updated on
1 min read

அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், அமெரிக்காவில் கடந்த 1999ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை மருந்துகளை அளவுக்கு அதிகம் எடுத்து கொண்டதன் விளைவால் 9 லட்சத்து 32 ஆயிரத்து 364 பேர் உயிரிழந்து உள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளது.

அந்நாட்டில் கொரோனா பெருந்தொற்று முதியவர்களை அதிகம் பாதித்தது.  ஆனால், அளவுக்கு அதிக மருந்துகளால் இளம் மற்றும் நடுத்தர வயதுடையோர் அதிக உயிரிழப்புகளை சந்திக்கின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

அமெரிக்காவில் மொத்தம் 5,55,99,747 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதேபோன்று 8,46,902 பேர் உயிரிழந்து உள்ளனர்.  எனினும், கொரோனாவை மிஞ்சும் வகையில், இதுபோன்று மருந்துகளை அளவுக்கு அதிகம் எடுத்து கொண்டதன் விளைவால் ஏறக்குறைய 10 லட்சம் பேர் உயிரிழப்பது பற்றிய தகவல் வெளிவந்துள்ளது.

இதேபோன்று, அந்த மையம் வெளியிட்டுள்ள மற்றொரு முதற்கட்ட தகவலில், நடப்பு 2021ம் ஆண்டில் மருந்துகளை அளவுக்கு அதிகம் எடுத்து கொள்வோரில் 1 லட்சம் பேர் வரை உயிரிழக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என்ற அதிர்ச்சி தகவலையும் தெரிவித்து உள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com