முகமது அலி ஜின்னா சிலை குண்டு வைத்து தகர்ப்பு...  தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு..

பாகிஸ்தானில், அதன் நிறுவனர் முகமது அலி ஜின்னாவின் சிலை குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
முகமது அலி ஜின்னா சிலை குண்டு வைத்து தகர்ப்பு...  தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்பு..
Published on
Updated on
1 min read

அண்டை நாடான பாகிஸ்தான் நிறுவனரான முகமது அலி ஜின்னா, அந்த நாட்டின் முதல் கவர்னர் ஜெனரலாக பதவி ஏற்றார். காசநோயால் பாதிக்கப் பட்டிருந்த இவர், 1948-ல் காலமானார். இவர் தன் கடைசி நாட்களில் வசித்து வந்த குடியிருப்பு கட்டடம், தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. 121 ஆண்டுகள் பழமையான இந்த கட்டடம், பலுாசிஸ்தான் மாகாணத்தின் ஜியாரத் பகுதியில் இருந்தது. எனினும் 2013-ல் பலுாச் பயங்கரவாதிகளால் அந்த கட்டடம் தகர்க்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இதில், அந்த கட்டடம் முழுதும் சேதமடைந்தது. 

இந்நிலையில் இந்த மாகாணத்தின் குவாடர் பகுதியில் இருந்த முகமது அலி ஜின்னாவின் சிலையும், நேற்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலுக்கு பலுாச் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் கடற்கரை நகரமான இங்கு, சமீபத்தில் தான் இந்த சிலை நிறுவப்பட்டது. இந்த சிலை தகர்ப்பு சம்பவம் குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்தப்பட்டு வருவதாக, பாகிஸ்தான்  ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com