அணுமின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து தென்கொரியா-இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் வணிக வட்ட மேசை மாநாடு நடைபெற்றது. இதில் தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல், தென்கொரியா மற்றும் இந்தோனேசியாவின் மந்திரிகள், தொழிலபதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது முக்கிய கனிமங்கள் மற்றும் பிற தொழில்துறைகளில் இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேலும் அணுமின் உற்பத்தி குறித்த தகவல்களை பரிமாறுவதற்காக இரு நாட்டு அணுமின் சங்கங்கள் சார்பிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டது.
இதையும் படிக்க | சச்சின் டெண்டுல்கருக்கு கோல்டன் டிக்கெட்..!