போரில் பின்வாங்குகிறதா உக்ரைன்... சுனக்கிடம் ஜெலன்ஸ்கி கூறியதென்ன?!

போரில் பின்வாங்குகிறதா உக்ரைன்... சுனக்கிடம் ஜெலன்ஸ்கி கூறியதென்ன?!
Published on
Updated on
2 min read

உக்ரைனுக்கு போர் விமானங்களை வழங்க வேண்டாம் என இங்கிலாந்துக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.  உக்ரன் அதிபரின் இங்கிலாந்து பயணத்தை தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இங்கிலாந்தில்..:

ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தை அடைந்த உக்ரைன் அதிபரை இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வரவேற்றார்.  அதன் பிறகு அவர் டவுனிங் தெருவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.  அங்கு இருவரும் தனிப்பட்ட முறையில் உரையாடினர்.

ரஷ்யா எச்சரிக்கை:

லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம் உக்ரைனுக்கு போர் விமானங்களை அனுப்புவதற்கு எதிராக இங்கிலாந்து அரசாங்கத்தை எச்சரித்துள்ளது.  மேலும் இது "ஐரோப்பிய கண்டம் மற்றும் முழு உலகிற்கும் இராணுவ மற்றும் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும்" என்றும் கண்டனம் தெரிவித்துள்ளாது.

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் உக்ரேன் அதிபர் வோலோடோமிர் ஜெலென்ஸ்கி ஆகியோர் சற்று முன்னர் டோர்செட்டில் உள்ள பிரிட்டிஷ் இராணுவ தளத்தில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தினர்.

இரண்டாவது பயணம்:

கடந்த ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் இரண்டாவது இங்கிலாந்து பயணம் இதுவாகும்.

முக்கிய அம்சங்கள் இங்கே:

இராணுவ உதவி: 

உக்ரைனுக்கான இராணுவ உதவி குறித்து பேசும் போது "எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும்,  தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் இன்னும் மதிப்பாய்வு செய்து வருகிறோம்" என்று ரிஷி சுனக் கூறியுள்ளார்.  

மேலும் போர் விமானங்கள் உரையாடலின் ஒரு பகுதியாக இருந்தது.  மேலும் போருக்கு தேவையான பொருட்கள் தீர்ந்துவிட்டதாகவும், போர் விமானங்கள் அல்லது நீண்ட தூர ஏவுகணைகள் இல்லாமல் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டத்தில் "தேக்கம்" ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

போர் உபகரணங்கள்: 

சில வாரங்களுக்குள் உக்ரைனை சென்றடைவதை உறுதி செய்வதற்காக ராணுவ தளவாடங்களை வழங்குவதை தனது அரசாங்கம் துரிதப்படுத்தி வருவதாக பிரதமர் சுனக் கூறியுள்ளார்.

டைபூன் ஜெட் விமானங்கள்: 

இங்கிலாந்தின் சில டைபூன் ஜெட் விமானங்களை உக்ரைனுக்கு அனுப்பத் தயாரா என்று சுனக்கிடம் ஜெலன்ஸ்கி கேட்டபோது, அவை "மிகவும் அதிநவீனமானவை" என்றும், ஒரு பைலட்டுக்கு அதை இயக்க பயிற்சி அளிக்க "மூன்று ஆண்டுகள்" ஆகலாம் எனவும் சுனக் தெரிவித்துள்ளார். 

பயிற்சி: 

சுமார் 10,000 உக்ரைன் வீரர்கள் இராணுவப் பயிற்சிக்காக இங்கிலாந்துக்குச் சென்றுள்ளனர்.  மேலும் சில நாட்களுக்கு முன்பு அதிக எண்ணிக்கையிலானவர்கள் சேலஞ்சர் 2 டாங்கிகளை எவ்வாறு இயக்குவது என்பதை அறிவதற்காக இலங்கை வந்துள்ளனர்.   இன்னும் சில வாரங்களில் சேலஞ்சர் டாங்கிகள் போர்க்களத்தில் இருக்கும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார்.

அடுத்த நிகழ்ச்சி:

பக்கிங்ஹாம் அரண்மனையில் மன்னர் சார்லஸைச் சந்திப்பதற்கு முன், வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் எம்.பி.க்களிடம் முக்கிய உரையை நிகழ்த்தவுள்ளார் ஜெலென்ஸ்கி.

அதன் பிறகு ஜெலென்ஸ்கி பாரிஸுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.  அங்கு அவர் பிரெஞ்சு அதிபர் மக்ரோன் மற்றும் ஜெர்மன் அதிபர் ஷோல்ஸை சந்திப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com