இந்தியா- சிலி இடையே கரிம உற்பத்தியை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!!

இந்தியா- சிலி இடையே கரிம உற்பத்தியை அதிகரிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம்!!!
Published on
Updated on
1 min read

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சிலி-இந்தியா விவசாய பணிக்குழு உருவாக்கப்படும்.  இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதற்கான மேற்பார்வை, மறுஆய்வு மற்றும் மதிப்பீடு, ஆகியவற்றிற்கு பொறுப்பாகும்.

புரிந்துணர்வு ஒப்பந்தம்:

இந்திய அரசுக்கும் சிலி அரசுக்கும் இடையே விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விவசாயம் மற்றும் அதை சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பை வழங்குவதை அடிப்படையாக கொண்டுள்ளது.

வர்த்தகத்தை எளிதாக்க:

நவீன விவசாயத்தின் வளர்ச்சிக்கான விவசாயக் கொள்கைகள் இந்த ஒத்துழைப்பின் முக்கிய பகுதிகளாகும்.  கரிமப் பொருட்களின் இருதரப்பு வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும், இரு நாடுகளிலும் கரிம உற்பத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகளின் பரிமாற்றத்தை ஊக்குவிப்பதற்கும், அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் கூட்டாண்மைக்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பணிக்குழு:

புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ், சிலி-இந்தியா விவசாய பணிக்குழு உருவாக்கப்படும் எனவும் இது புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிட்டு மறுஆய்வு மற்றும் மதிப்பீடு மசெய்யும் என இரு தரப்பிலும் கூறப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com