சீனாவில் கடந்த சில மாதங்களாக கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தொற்று அதிகமுள்ள ஷாங்காய் நகரில், ஒரு மாதத்திற்கும் மேலாக பொதுமக்கள் வீட்டுச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதுதவிர வெளிநாட்டவர்கள் சீனாவுக்குள் நுழையவும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே தொற்று குறைவாக உள்ள பகுதிகளில், மக்கள் அன்றாட பணிகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில், பெய்ஜிங்கில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளதால், அங்கு மீண்டும் புதிதாக பரிசோதனை பணிகளை சுகாதார ஊழியர்கள் தொடங்கியுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்கலைக்கழக தேர்வுகளும் ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.