”தான் அதிபராக இருந்திருந்தால்....” முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!!!

”தான் அதிபராக இருந்திருந்தால்....” முன்னாள் அமெரிக்கா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!!!
Published on
Updated on
1 min read

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வேட்புமனுவை வெள்ளைமாளிகையில் தாக்கல் செய்த டொனால்ட் டிரம்ப் நாட்டின் மறுபிரவேசம் இனிதான் தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், வரும் 2024ம் ஆண்டு அடுத்த தேர்தல் நடக்கவுள்ளது. இந்நிலையில் அதிபர் பதவிக்கு போட்டியிடும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் வெள்ளைமாளிகையில் வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

இதையடுத்து தொண்டர்களிடையே பேசிய அவர், ஜி 20 உச்சிமாநாட்டில் ஜோபைடன் உறங்கிவருவதாக குற்றம்சாட்டினார். தான் கட்டியெழுப்பிய பொருளாதாரத்தை அவர் நாசமாக்கி வருவதாகவும் டிரம்ப் புகார் தெரிவித்தார்.

3 ஆண்டுகளுக்கு முன் சிறந்த நாடாக அமெரிக்கா இருந்தது எனவும் வடகொரியாவை அப்போது கட்டுக்குள் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.  தான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் போரே நடந்திருக்காது எனவும் தற்போதுதான் தேசத்தின் மறுபிரவேசம் தொடங்கவுள்ளது எனவும் அவர் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com