அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சமூக ஊடக தளமான பேஸ்புக்கிற்கு திரும்ப விரும்புகிறார்.
வன்முறையைத் தூண்டும் குற்றச்சாட்டின் பேரில் சமூக ஊடகத் தளத்தில் டொனால்ட் ட்ரம்ப்பை பேஸ்புக் தடை செய்தது. தற்போது இரு தரப்புக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் போட்டியிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் ஏற்கனவே தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டார் அத்தகைய சூழ்நிலையில், பேஸ்புக்கிற்கு அவர் திரும்புவது உதவியாக இருக்கும்.
இதைக் குறித்து பேசிய ட்ரம்ப், “நாங்கள் மெட்டாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் எங்களைத் திரும்ப அழைத்துச் சென்றால், அது அவர்களுக்குப் பெரிய பலனைத் தரும். நமக்கும் நன்றாக இருக்கும்.” என்று கூறியுள்ளார். குறிப்பிடத்தக்க வகையில், சமூக ஊடக தளத்திலிருந்து டொனால்ட் டிரம்ப் இணைவதுகுறித்து மெட்டா இந்த மாதம் ஒரு முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-நப்பசலையார்