உலகின் முதல் டெஸ்லா குழந்தை!!....காரில் பிரசவம் பார்த்த கணவர்!!

மனைவிக்கு பிரசவலி ஏற்பட்ட நிலையில் காரினை ஆட்டொ பைலட் முறைக்கு மாற்றிய கணவர் பிரசவம் பார்த்த ருசிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகின் முதல் டெஸ்லா குழந்தை!!....காரில் பிரசவம் பார்த்த கணவர்!!
Published on
Updated on
2 min read

பென்சில்வேனியா பகுதியை சேர்ந்தவர்கள் டெஸ்லா காரில் குடும்பமாக பயணித்து வந்துள்ளனர்.இதில் மனைவிக்கு திடீரென ஏற்பட்ட பிரசவ வலியால் கணவர் சூழ்நிலைக்கு ஏற்றவாறு சாமர்த்தியமாக யோசித்து செயல்பட்டுள்ளார்.

டெஸ்லா நிறுவனம் உலக அளவில் ஆட்டோமொபைல் துறையின் முன்னனியில் உள்ளது. இதன் நிறுவனரான எலான் மஸ்க் உலக கோடீஸ்வரர்களில் ஒருவராக திகழ்கிறார்.இந்த நிறுவனத்தின் கார்கள் உலகெங்கும் புகழ் பெற்றவையாக இருந்த வண்ணம் உள்ளது.

இதன் விலை சுமார் பல லட்சத்திலிருந்து கோடிகள் வரை இருப்பதாகவும், காரில் விலைக்கு தகுந்த சிறப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவித்தனர்.ஆட்டோபைலட் முறையான கார்கள் மிகவும் பிரபலமான ஒன்றாகும்.இதன் சிறப்பு அம்சங்களில் காரை இயக்காமல் தானகவே இயங்கும் எனவும் இந்த வசதியை ஓட்டுநர் இருக்கையில் யாரேனும் அமர்ந்திருக்கும் நிலையில் இதனை பயன்படுத்துவது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வகையான கார்கள் பலரின் உயிர்களை ஆபத்து நிலையில் இருந்து காப்பாற்றி உள்ளதாக அதனை தொடர்ந்து தற்போது ஒரு பெண் குழந்தையை அதில் பெற்றெடுக்கவும் உதவியுள்ளது என குறிப்பிடுகின்றனர்.

பென்சில்வேனியா சேர்ந்த தம்பதியான கீட்டிங் ஷெர்ரி-யிரான் ஷெர்ரி இவர்களுக்கு மூன்று வயதில் மகன் உள்ள நிலையில் இரண்டாவது குழந்தை தற்போது இந்த முறையில் பிறந்தது பலராலும் பேசப்பட்டு வருகிறது.

மருத்துவமனையை நோக்கி வேகமான சென்ற நிலையில் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் அவரது கணவர் டெஸ்லா காரை ஆட்டோ பைலட் முறைக்கு மாற்றி பிரசவத்திற்கு உதவிய நிலையில் இவர்களுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.குழந்தையும் தாயும் நலமாக உள்ளதாக கீட்டிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த முறை காரில் இருந்தது பெரிதும் உதவியாக நேர்ந்தது என டெஸ்லா நிறுவனத்திற்கு இப்படிப்பட்ட காரை உருவாக்கியதற்காக நன்றி தெரிவித்தனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com