பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு நபர் பழைய காரின் உதிரி பாகங்களை கொண்டு உருவாக்கிய ஹெலிகாப்டர் மூலம் வானில் பறந்துள்ளார்.பிரேசிலின் வடகிழக்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ நோர்டாவில் இவ்வகையான சம்பவம் நடந்துள்ளது.
பழைய மோட்டார் சைக்கில் மற்றும் லாரி, கார், மிதிவண்டி போன்றவற்றின் உதிரி பாகங்களை எடுத்து அவர் இந்த ஹெலிகாப்டரை உருவாக்கியுள்ளார். இந்த விமானம் வோல்க்ஸ்வேகன் பீட்டில் இன்ஜின் கொண்டு தயாரிக்கப்படுள்ளது.
ஜோவோ டயஸ் நகரத்தை சார்ந்த ஜெனிசிஸ் கோம்ஸ் என்ற அந்நபர் வாகனங்கள் பயணிக்கும் சாலையை விமான ஓடுதளமாக பயன்படுத்தி காரிலிருந்து உருவாக்கப்பட்ட விமானத்தை இயக்கியுள்ளார். இதனை அங்கு வசிப்போர் சிலர் படம் பிடித்து சமூகவலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
மேலும் அவர் சிறுவயதிலிருந்தே விமான சேவையின் மீது அதீத ஆர்வமுடையவராக இருந்து வந்துள்ளார். ஹெலிகாப்டர் ஒன்றை உருவாக்கி அதனை இயக்க வேண்டும் என்பது இவரின் கனவாக இருந்துள்ளது. ஆனால் அவை சாத்தியமாகவில்லை, இதனை தொடர்ந்து அவர் ஒரு ஹெலிகாப்டரை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக அப்பகுதியினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “இந்த ஹெலிகாப்டர் என் நண்பனுடையது” எனவும் நாங்கள் ஜோவோ டயஸ் நகரத்தின் மீது உயரமாக பறந்தோம். விரைவில் தனக்கென ஒரு ஹெலிகாப்டரை தயாரிப்பேன். இது முற்றிலுமாக பழைய உதிரி பாகங்களை வைத்து தயாரிக்கப்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.