இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க குடிமகன் ரவி சவுத்ரியை அமெரிக்க விமானப்படையின் உதவி செயலாளராக அமெரிக்க செனட் புதன்கிழமை நியமித்துள்ளது. விமானப்படையில் ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பானவைகளுக்கு ரவி உதவி செயலாளராக பொறுப்பேற்றுள்ளார்.
வணிக விண்வெளி போக்குவரத்து பணிகளின் மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதற்குரிய பொறுப்பில் பணியாற்றினார் ரவி சௌத்ரி. போக்குவரத்துத் துறையில் இருந்தபோது, அவர் பிராந்தியங்கள் மற்றும் மைய நடவடிக்கைகளின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியிருந்தார். அவர் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெற்ற போர்களிலும் பங்கேற்றுள்ளார்.
விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சௌத்ரி ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகத்தின் வணிக விண்வெளி அலுவலகத்தில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார். முன்னாள் ஜனாதிபதி ஒபாமா, ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசனைக் குழுவில் பணியாற்ற அவரை நியமித்திருந்தார். விமானப்படையின் உதவி செயலாளராக பதவியேற்ற முதல் இந்திய-அமெரிக்கர் ரவி சவுத்ரி ஆவார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: திருத்தப்பட்ட மதிப்பீடுகளில் ரூ.19,479 கோடி ஒதுக்கீடு ....!!!