வறுமைக்காக 10 வயது குழந்தையை விற்ற குடும்பம்....

கடுமையான வறுமை காரணமாக 10 வயதன பெண் குழந்தையினை விற்று அந்த பணத்தில் குடும்பம் உணவருந்தி வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வறுமைக்காக 10 வயது குழந்தையை விற்ற குடும்பம்....
Published on
Updated on
1 min read

ஆப்கானில் நிலவி வரும் வறுமையின் கோரத்தால் 10 வயதான பெண்ணை அவரது தந்தையே மற்றொரு நபருக்கு விற்றுள்ளார்.20 வருடங்கள் கழித்து  ஆட்சியை கைப்பற்றிய தாலிபான்கள் பல கட்டுப்படுகளை  விதித்து மக்களை துன்புறுத்தி வருகின்றனர்.ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.

பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி இல்லை.மற்றொரு பக்கம் அந்த நாடே வறுமையிலும் பட்டினியிலும் சிக்கி கொண்டுள்ளது.கடந்த நவம்பர் மாதம் ஐநா ஒரு எச்சரிக்கை தகவலை வெளியிட்டிருந்தது.. அதில், "5 வயதுக்கு கீழ் உள்ள 32 லட்சம் குழந்தைகள் சரியான உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றன.ஆப்கானிஸ்தானின் 39 மில்லியன் மக்களில் பாதிக்கு மேல் 22.8 மில்லியன் மக்கள் கடுமையான உணவு பாதுகாப்பின்மை மற்றும் பட்டினியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றனர்.. பொருளாதாரம் அதைவிட வேகமாக வீழ்ச்சி அடைந்துள்ளது.. குழந்தைகள் உயிரிழக்க போகிறார்கள்.

எனினும், மக்கள் தொடர்ந்து வறுமையிலும், வேலையில்லாமலும், சாப்பாடு இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர்... மேற்கத்திய நாடுகளும் ஆப்கானிஸ்தானுக்கான உதவியை நிறுத்திவிட்டது.. இதனால், நிதி நிலைமை மோசமாகிவிட்டது.. எனவே, இளம்பெண்களை ஹெராட், பட்கிஸ் போன்ற பகுதிகளில் உணவுக்கு வழியில்லாமல் பெற்றோர் தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கும் ஆளாகினர்.இப்போதும் அதே நிலைமைதான் நீடிக்கிறது.பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த தகவலை வோர்ல்டு விஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

தொடர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் ஆப்கன் மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சாப்பாடு தர முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால், தங்கள் குழந்தைகளை விற்கும் இன்னலுக்கு மேலும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இப்படித்தான், ஆப்கனில் வசிக்கும் ஒருவர் தன்னுடைய மனைவிக்கு தெரியாமல், 10 வயது பெண் குழந்தையை இன்னொருவருக்கு கல்யாணம் செய்து தருவதற்காக, பெண்ணை விற்று பணம் பெற்றுள்ளார்... அந்த பணத்தை வைத்து, வீட்டில் இருந்த மற்ற 5 குழந்தைகளுக்கும் சாப்பாடு தந்துள்ளார்.இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோலவே பல குடும்பங்கள் அவதிக்கு ஆளாகி உள்ளாகின்றனர்.இதனால் அதிக பாதிப்புக்குள்ளாவது என்னவோ குழந்தைகள்தான், இந்த நிலையில் இருந்து ஆப்கன் மக்களை மீட்க நிதியுதவிகள் அவசியம் தேவைப்படுகிறது என்றும் அந்த வோர்ல்டு விஷன் உதவி அமைப்பு தெரிவித்துள்ளது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com