”பொய்யான வாக்குறுதிகளை விட தோல்வியே சிறந்தது”- ரிஷி சுனக்

பொய்யான வாக்குறுதிகளை தந்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே சந்தோஷம் என இங்கிலாந்தின் பிரதமர் வேட்பாளரான ரிஷி சுனக்  தெரிவித்துள்ளார்.
”பொய்யான வாக்குறுதிகளை விட தோல்வியே சிறந்தது”- ரிஷி சுனக்
Published on
Updated on
1 min read

இங்கிலாந்தில் அதிக குடும்பங்கள் மிகவும் மோசமான சூழலில் வாழ்ந்து வருகின்றன எனவும் அவர்களுக்கு வாழ்வதற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் எனவும் ரிஷி சுனக் பேட்டியில் பேசியுள்ளார்.  மேலும் குளிர்காலத்தில் அவர்களுக்கு அதிக உதவி செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மற்றுமொரு பிரதமர் வேட்பாளரான லிஸ் ட்ரஸ் வரி குறைப்பு செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.  அதைக் குறித்து பேசிய ரிஷி சுனக் வரி குறைப்பு என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே ஆதாயமாக இருக்கும் என விமர்சித்துள்ளார்.  மேலும் தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை தந்து வெற்றி பெறுவதை விட தோல்வியடைவதே சிறந்தது என தெரிவித்துள்ளார்.

இந்த நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு கடினமான குளிர்காலத்தில் உதவ வேண்டும் என்பதே அவரது  விருப்பம் எனவும் ரிஷி சுனக் குறிப்பிட்டுள்ளார்.  ஆனால் அவருடைய முதல் விருப்பமாக மக்களிடமிருந்து எப்போதும் பணத்தை எடுக்க கூடாது என்பதே எனவும் சுனக் கூறியுள்ளார்.

அவரது அரசியல் செயல்பாடுகளை ஏற்கனவே மக்கள் நன்கு தெரிந்துள்ளனர் எனவும் கோவிட் காலத்தில் அவர் சிறப்பாக செயல்பட்டதையும் இங்கு நினைவுகூர்கிறார் சுனக்.

நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் பணவீக்கத்தைக் குறித்து கவலை கொள்கின்றனர்.  குறிப்பாக எரிசக்தி பொருள்களின் விலை அதிகரிப்பு அவர்களை அதிகமாக கவலையடைய செய்கின்றன எனவும் அவர் பிரதமரானால் இதற்கான நடவடிக்கை எடுப்பதாகவும் கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com