உலக நாடுகள் ஒமிக்ரான் வைரஸ் அச்சத்தால் உறைந்து கிடக்கும் நிலையில் இலங்கையில் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து வருவது பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த நவம்பர் மாதம் முதல் கேஸ் சிலிண்டர்கள் வெடித்து வருவதாக சொல்லப்படுகிறது.இதுவரை 863 சிலிண்டர்கள் வெடித்து உள்ளதாகவும் அதில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெலிகம பகுதியில் கடந்த நவம்பர் மாதம் சுற்றுலா விடுதியில் முதலாவதாக சமையல் எரிவாயு வெடித்த சம்பவம் நிகழ்ந்தது.இலங்கையில் 24 மணி நேரத்தில் 23 சமையல் எரிவாயுகள் வெடித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.இப்படிப்பட்ட சம்பவத்தில் 7 பேர் இறந்தது அடுத்து 16 பேர் காயமடைந்துள்ளனர்.சிலிண்டர் வெடிப்புகளினால் பெருமளவு உடைமைகள் சேதமடைந்து வருகின்றன.
இதனை தொடர்ந்து சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்புகளை கண்டு அந்நாட்டு மக்கள் அச்சத்தில் இருந்து வருவதோடு மட்டுமல்லாமல் சிலிண்டருக்கு பதில் மண்ணெண்ணெய் பயன்பாட்டை தொடங்க உள்ளதாக தெரிவித்தனர்.உணவு பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது மண்ணெண்ணெயின் விலையையும் அதிகரித்து வந்துள்ளனர்.பல மணிநேரம் வரிசையில் நின்று பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலங்கையில் மட்டும் வெடிப்பதற்கான காரணத்தை அறிய தொடங்கியதில் சமையல் எரிவாயுகளில் கலப்படம் செய்திருக்க கூடினால் இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது